கொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி!

Share this News:

டொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார்.

கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பிரதமரின் மனைவி சோஃபி பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனர். சோஃபியும் சனிக்கிழமை இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் சோஃபி வெளியிட்ட பதிவில், நான் பாதிக்கப்பட்டிருந்தபோது குணமடைய பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி என்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் அன்பைப் பகிர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மனைவி பாதிக்கப்பட்டதால் தானும் மார்ச் 12ஆம் தேதி முதல் தனிமையில் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இரண்டு வார தனித்திருக்கும் காலம் முடிந்துவிட்டபோதும் தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே பணிகளைக் கவனிக்க அவர் முடிவு செய்துள்ளார்


Share this News:

Leave a Reply