ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை – அமெரிக்கா விருப்பம்!

Share this News:

நியூயார்க் (09 ஜன 2020): இரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை அமெரிக்க வான்வெளி தாக்குதல் மூலம் வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இந்த சம்பவத்தால் ஈரானில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈராக்கின் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் உள்ள சேத விவரங்கள் குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே ஐ.நாவுக்கு அமெரிக்க அதிபர் கடிதம் எழுதியுள்ளார். ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் எழுதியுள்ள அந்த கடிதத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், ஈரான் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply