லண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை பிரிட்டன் பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
மேலும் பிரிட்டனின் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை.