புதுடெல்லி (11 டிச 2022): வாட்ஸ் அப்பில் புதிய வசதியை அறிமுகப் படுத்தவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள தனக்குத்தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தப் படவுள்ளது.
அதேபோல ஒரு செய்தியை ஒரு முறை மட்டுமே வாசிக்கும் வகையிலும் புதிய அம்சம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.