இந்நேரம்

தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய பஜக நிர்வாகி!

ஈரோடு (24 ஜன 2023): ஈரோடு அருகே தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி சண்முகம் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின்…

மேலும்...

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது. பிரசவ காலத்தில் அந்த பெண் சிக்கல்களை தவிர்ப்பதற்காக ஐந்தாவது மாதத்திலேயே மருத்துவ கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாயும் கருவில் உள்ள குழந்தைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். தற்போது அந்த பெண்ணும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக ரியாத் இரண்டாவது ஹெல்த் கிளஸ்டர் தெரிவித்துள்ளது….

மேலும்...

ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் – முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு…

மேலும்...

குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படம் இரண்டாம்பாகம் இன்று வெளியாகிறது!

புதுடெல்லி (24 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாகிறது. ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் பிபிசியின் ஆவணப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. வெளியான நாளில் இருந்து, இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளில் பெரும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை பிபிசி இன்று ஒளிபரப்புகிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என பிபிசி அறிவித்துள்ளது. பிபிசியின் இந்த…

மேலும்...

புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய “தி துபாய் மால்” அதன் பெயரை மாற்றுகிறது. உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் தற்போதைய பெயர் “தி துபாய் மால்” பெயரில் இதுவரை “தி துபாய் மால்” என்று அழைக்கப்பட்டு வந்த இது இனி வெறும் ‘துபாய் மால்’ என்று மட்டும் அழைக்கப்படும். துபாய் மால் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பெயரை…

மேலும்...

ஊழியர்களை சவூதிமயமாக்கலில் நிதாகத் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சவுதிமயமாக்கலை கட்டாயமாக்கும் திருத்தப்பட்ட நிதாகத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும். சவூதி அரேபியாவில், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சவூதி குடிமக்களைப் பணியமர்த்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நிதாகத் (Nitaqat) என்பது சிவப்பு, வெளிர் பச்சை, நடுத்தர பச்சை, அடர் பச்சை மற்றும் பிளாட்டினம் போன்ற வெவ்வேறு வண்ணங்களில் சவுதி மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப…

மேலும்...

வாரிசு குடும்பத்தில் விரிசலா?

சென்னை (23 ஜன 2023): நடிகர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் லடாய் என்பதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த லடாய்க்குப் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான படம் வாரிசு. கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த படம் ஒருபுறமிருக்க வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்காதது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலும் சங்கீதா நடிகர்…

மேலும்...

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், “நில அதிர்வு எதுவும் ஏற்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும் ஊடகங்களையும் ஆய்வு செய்தனர். எதிலும் நில அதிர்வு அல்லது பூகம்பம் குறித்து தகவல் இல்லை. மிகுந்த குழப்பத்துக்கிடையே ‘TimeOut Dubai’ என்ற இணையதளம் அது பூகம்பம் அல்ல என்பதை உறுதி செய்தது. மேலும் துபாய்…

மேலும்...

ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடுகளை நிராகரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாபைத் தடை…

மேலும்...

ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 16 பேர் பலி!

அலெப்போ (23 ஜன 2023): சிரியாவின் வடக்கு நகரமான அலப்போ நகரில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் 30 பேர் வசித்து வருகின்றனர். நேற்று திடீரென இந்த கட்டிடம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஓரு குழந்தை உள்பட 16 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து…

மேலும்...