இந்நேரம்

துபாயில் இந்தியர் நலவாழ்வு பேரவை சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்!

துபாய் (22 ஜன 2023): துபாயில் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. IWF பேரவையின் அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில்,IWF அமீரக துணைத்தலைவர் A.S. இப்ராஹிம், IWF அமீரக பொருளாளர் டாக்டர் அப்துல் காதர் IWF அமீரக துணைச்செயலாளர் பொறியாளர் முகம்மது கஜ்ஜாலி,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது… இதில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக HASHEMITE Group…

மேலும்...

ஜித்தா விமான நிலையத்தில் நெரிசலை நீக்க நடவடிக்கை!

ஜித்தா (22 ஜன 2023): சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா விமான நிலையத்தின் செயல்பாடுகளை எளிதாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ரமலான் மாதத்தில், ஜித்தா விமான நிலையத்தில் பல பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சரியான நேரத்தில் புறப்பட முடியாமலும், விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாமலும் சிரமப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பிறகு விசாரணையில் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழுக்களாக வரும் உம்ரா யாத்ரீகர்களின் தன்மை, அதிக அளவு மற்றும் சாமான்களின் எடை, பணியாளர் எண்ணிக்கை…

மேலும்...

கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா அட்டையில் கத்தாருக்கு வந்தவர்கள் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஹயா அட்டையில் கத்தாருக்கு வருபவர்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேரம் நீட்டிக்கப்படும்…

மேலும்...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மக்கா கவர்னரேட் ட்வீட் செய்துள்ளது. மக்கா மாகாணத்தில் அல் குன்ஃபுடா, அல் லைத், அல் அர்டியாத் மற்றும் தாயிப் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல் மஜ்மா, அல் ஜுல்பி, அல்…

மேலும்...

பசு கடத்தல் வழக்கில் 22 வயது இளைஞர் முஹம்மது அமீனுக்கு ஆயுள் தண்டனை!

புதுடெல்லி (21 ஜன 2023): பசுக்களை கடத்திய வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் விசித்திர தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், தெப்சி மாவட்டத்தின் நிஜார் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு டிரக்கில் 16 மாடுகளைக் கொண்டு சென்றபோது, மாடுகளை கடத்தியதாக அமீன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு குஜராத் வியாராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை…

மேலும்...

யோகி ஆதித்யநாத் இல்ல காவல் படை வீரர் மர்ம மரணம்!

லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் அலிகாரி நகரின் கெய்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அரசு வாகனத்தில் தனது முகாமுக்கு அவர் திரும்பியுள்ளார்….

மேலும்...

தலைவர்களுக்கிடையே போர் – உடைகிறதா ராஜஸ்தான் காங்கிரஸ்?

புதுடெல்லி (21 ஜன 2023): ராஜஸ்தானில் அசோக் கெலாட்-சச்சின் இடையே நடந்த வார்த்தைப் போரால் காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் உள்ளது. இந்த புதிய சர்ச்சை எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கவலை கொள்கிறது. தலைவர்களுக்குள் வார்த்தைப் போர் நடக்கும் போது தேசிய தலைமை தலையிட்டு சரிசெய்யும். எனினும் சில இடைவெளிக்குப் பிறகு, தலைவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் இதுதான் நிலைமை. சமீபத்திய வினாத்தாள்…

மேலும்...

ரியாத் சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்!

ரியாத் (20 ஜன 2023): ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது டெர்மினல்கள் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் அப்துல்அசிஸ் அல்துஅய்லிஜ் தெரிவித்துள்ளார். ரியாத் விமான நிலையத்தில் டெர்மினல்கள் 3 மற்றும் 4 அவ்வப்போது நெருக்கடி ஏற்படுவதால், இதனைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு இந்த மேம்பாட்டுத் திட்டம் உதவும். ரியாத் விமான நிலையத்தில் 1, 2 மற்றும் 5 ஆகிய டெர்மினல்கள்…

மேலும்...

சவூதி அரேபியா மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு!

ரியாத் (20 ஜன 2023): சவுதி அரேபிய மசூதிகளில் பாங்கு அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் எண்ணிக்கை நான்காக மட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இருந்தால், அவற்றை அகற்றி மாற்ற வேண்டும் என இஸ்லாமிய விவகார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து இஸ்லாமிய விவகார அமைச்சர் ஷேக் அப்துல் லத்தீப் அல் ஷேக் உத்தரவிட்டுள்ளார். நான்குக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் இயங்கினால், அவற்றை அகற்றி மாற்றி, கிடங்கில் வைக்க வேண்டும் என அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். மேலும் போதிய ஒலிபெருக்கிகள் இல்லாத…

மேலும்...

சவூதி ஜித்தாவில் மிகப்பெரிய மதுபான கிடங்கு – அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!

ஜித்தா (20 ஜன 2023):சவூதி அரேபியா ஜித்தா நகரில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சட்டவிரோத கிடங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு ஜித்தாவில் உள்ள அல் தய்சீர் மாவட்டத்தில் உள்ள இந்த சட்டவிரோத கிடங்கில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அங்கு இருந்த சட்டவிரோத கிடங்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த மையம், மதுபானங்களை சேமித்து வைக்கும் கிடங்காக தவறாக பயன்படுத்தப்பட்டது சோதனையின்போது தெரியவந்தது. நகராட்சி…

மேலும்...