நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் திடீர் போராட்டம்!

நெய்வேலி (07 பிப் 2020): விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடத்தக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் . இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...

சீறு – சினிமா விமர்சனம்!

பல வருடங்களாகவே ஜீவாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் எதுவும் வரவில்லை. சீறு அதனை நிவர்த்தி செய்ததா? ஜீவா மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார். இந்நிலையில் ஊரில் எம் எல் ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார். அதற்காக சென்னையில் உள்ள…

மேலும்...

வானம் கொட்டட்டும் – சினிமா விமர்சனம்!

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமா, ராதிகா, விக்ரம் பிரபு என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் வானம் கொட்டட்டும். சரத்குமார் தேனியில் பெரிய ஆள், அவரின் அண்ணனுக்கு உயிர் ஆபத்து வருகிறது. இதனால் பலி வாங்கும் செயலில் இறங்கியவர் சிறைக்கு செல்கிறார். அவரின் மனைவியாக ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது….

மேலும்...

பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்ம மரணம்!

திருவனந்தபுரம் (07 பிப் 2020): பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ். கேரள மாநிலம் கொச்சினை பூர்விகமாக கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அவரது மகனாக விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் உள்ளார். இந்நிலையில் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின். 62 வயதான இவர் கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியில்…

மேலும்...

பிகில் ஏற்படுத்திய திகில் – நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை!

சென்னை (06 பிப் 2020): நடிகர் விஜய் வீட்டில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை இன்றும் தொடர்கிறது. நடிகர் விஜய் நேற்று நெய்வேலியில் நேற்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை கையோடு அழைத்து வந்து சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து சோதனை நடத்தினர். அது விடிய விடிய தொடர்ந்தது. மேலும் இன்றும் சோதனை தொடர்கிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப்.,05)…

மேலும்...

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது…

மேலும்...

முஸ்லிமாக தோன்றும் நடிகர் சிம்பு!

சென்னை (04 பிப் 2020): வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு முஸ்லிம் வேடத்தில்நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட்…

மேலும்...

தர்பார் தோல்விக்கு அரசு உதவும் – பரபரப்பை ஏற்படுத்தும் அமைச்சர்!

சென்னை (04 பிப் 2020): தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பெரிய நடிகர்கல் நடிக்கும் திரைப்படங்களின் டிக்கெட் தொகை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் திரைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ…

மேலும்...

ரஜினியின் தர்பார் தோல்வி – உண்ணாவிரதம் இருக்க முடிவு!

சென்னை (03 பிப் 2020): தர்பார் பட தோல்வியால் விரக்தியில் உள்ள விநியோகஸ்தர்கள் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என விநியோகஸ்தர்கள் சிலர் அறிவித்துள்ளார்கள். ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். தயாரிப்பு – லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ….

மேலும்...

விருதை திருப்பி அளித்த இயக்குநர் சேரன்!

சென்னை (02 பிப் 2020): பிரபல எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது சமீபத்திய படத்துக்கு விமர்சனம் எழுதாததால் அவர்கள் கொடுத்த விருதை திரும்ப அளித்தார் சேரன். பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபலமான அந்த நிறுவனம் சேரனுக்கு ‘ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்ற விருதை வழங்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சேரன் நடித்து ‘ராஜாவுக்கு செக்’ படம் வெளியானது. இந்த…

மேலும்...