கேரளாவில் விமான விபத்து!

கோழிக்கோடு (07 ஆக 2020): துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் உட்பட 191 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் இல்லை. அதேவேளை காயம் அடைந்தவர்கள் புலிக்கள் பி.எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்!

திருவனந்தபுரம்(07 ஆக 2020): கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80…

மேலும்...
Manoj Sinha

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரானார் மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா!

சிறீநகர் (05 ஆக 2020): மோடி-அமித்ஷாவின் நெருங்கிய சகா எனும் தகுதியுடன், பிரிவு 370 நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார் மனோஜ் சின்ஹா என்பவர்..! உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்தான் மனோஜ் சின்ஹா. ஆனால் பா.ஜ.க.-வின் வேறு திட்டங்கள் மூலம் யோகிக்கு அந்த ஜாக்பாட் அடித்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு, மாநிலமும் ஜம்மு காஷ்மீர்,…

மேலும்...

முதல்வருக்கும் ஸ்வப்னாவுக்கும் தொடர்பு – என்.ஐ.ஏ பரபரப்பு தகவல்!

திருவனந்தபுரம் (06 ஆக 2020): தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு கேரளா முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ் அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று பேர் மீதும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சூழலில்,…

மேலும்...
Custodial Death

மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா? மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..!

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் காவல் நிலைய லாக்-அப் மரணங்கள் தொடர்பாக உடனே பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இந்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள உச்ச நீதிமன்றம் இந்திய மாநிலங்களில் அந்தந்த மாநில மனித உரிமை ஆணையங்கள் உண்மையிலேயே செயல்படுகின்றனவா உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம், இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கைகளை…

மேலும்...
Yediyurappa

கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

பெங்களூரு (ஆகஸ்ட் 02,2020): கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தனது ட்விட்டர் பகுதியில் அவர் கூறியுள்ளார்.தென்னிந்திய மாநிலங்களில் தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5,532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து…

மேலும்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (02 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில் “கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்டபோது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்...

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

புதுடெல்லி (02 ஆக 2020): இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 20க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளான…

மேலும்...

சமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை – நாடெங்கும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

புதுடெல்லி (01 ஆக 2020): இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை அன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலக முஸ்லிம்கள் இந்த பண்டிகை காலத்தில் புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், இவ்வருடம் சவூதியில் வசிக்கும் ஒரு…

மேலும்...

மத்திய அரசு மீது நடிகர் கார்த்தி சாடல்!

சென்னை (29 ஜூலை 2020): மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020’ வரைவுக்கு நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் நடிகருமான கார்த்தி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல” மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக…

மேலும்...