Dr.Kafeel Khan-Gorakhpur

கானுக்கு களங்கம் கற்பிக்க முயலும். உ.பி. அரசு!

தில்லி (28 ஜூலை 2020):மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 10, 2017 இரவு உ.பி. அரசு மருத்துவமனை ஒன்றில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை நெருக்கடியில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவ்வேளை, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளை காப்பாற்றியதற்காக டாக்டர் கஃபீல் கான் ஒரு ஹீரோ என்று புகழப்பட்டார்.  நாடே அவரைக் கொண்டாடியது! ஆகஸ்ட் 22 அன்று, அவர் தனது விரிவுரையாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்த 60 மரணங்களுக்கும் அவரே காரணம் என்று…

மேலும்...
Raeesa Ansari

‘முஸ்லிமா – உயர்ஜாதி அல்லாத சமூகமா..? அப்போ வேலை கிடையாது..!’

இந்தூர் (24/07/2020):மத்திய பிரதேசத்தின் இந்தூரில் காய்கறி விற்பனையாளர் ரைசா அன்சாரி நகராட்சி நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பொருள் அறிவியலில் பி.எச்.டி பெற்றதாக ரைசா அன்சாரி கூறுகிறார். இந்தூரில் உள்ள நகராட்சி அதிகாரிகள் காய்கறி விற்பனையாளர்களை துன்புறுத்துவதாகவும், அவர்கள் வியாபாரத்தை சுமுகமாக நடத்த அனுமதிக்கவில்லை என்றும் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். பொருள் அறிவியல் பிரிவில் பிஎச்.டி. படித்த நீங்கள் ஏன் காய்கறி விற்கிறீர்கள்? என்று அவரிடம் வினவிய என்.டி.டி.வி.- இடம் அவர்,…

மேலும்...

மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி!

போபால் (25 ஜூலை 2020): மத்திய பிரதேச முதல்வர் ஷிவராஜ் சவுஹானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்...
RSS

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா?

போபால் (25 ஜூலை 2020):தில்லியில் உள்ள நிஜாமுத்தின் மர்கஸ் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்த விஷயத்தை பாஜக ஊதி பெரிதாக்கியது. பாஜக வைச் சேர்ந்த பாப்தியா என்பவர் தப்லீக் ஜமாஅத்தினரை ‘அறிவற்ற பன்றிகள்’ என்ற தகாத வார்த்தைகள் மூலம் கேலிப்படுத்தினார். தற்போது மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்.-காரர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி ஜியா உல் ஹக் என்ற மாணவர் பாப்தியா பயன்படுத்திய அதே ‘பன்றிகள்’ என்ற…

மேலும்...

பொருளாதாரம் கோமாவில் உள்ளது – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சாடல்!

புதுடெல்லி (24 ஜூலை 2020): நமது பொருளாதாரம் கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் சிங்கப்பூரை சார்ந்த டிபிஎஸ் வங்கி நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டு ரகுராம் ராஜன் உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்கள் : ஆர்பிஐ நாட்டின் வங்கிகளிடமிருந்து ரிவர்ஸ் ரிபோ விகிதத்தில் தொகையினை வாங்கி மத்திய அரசுக்கு கடனாக வழங்கி வருகிறது. இதனால் வங்கிகளுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையை அதிகப் பணப் புழக்கம் கொண்டு சமாளிக்கலாம் என…

மேலும்...

கொரோனா பாதித்த சிறுமி மீது பாலியல் வன்கொடுமை!மற்றொரு கொரோனா நோயாளி வெறிச்செயல்!

தில்லி (24 ஜூலை 2020): தில்லியிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 20 கால்பந்து மைதானங்களின் அளவை ஒத்த, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் ஒன்று தெற்கு தில்லி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10,000 பேர் வரை சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தற்போது…

மேலும்...
UAPA Cases

பாதிக்கப்பட்டோருக்காக போராடினால் சட்டவிரோத தடுப்பு சட்டம்..?

தில்லி (ஜூலை 24):வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 27 வயதான மாணவி குல்ஃபிஷா ஃபாத்திமா.இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலமான ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஃபாத்திமா கைது செய்யப்பட்டார்.ஃபாத்திமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பின.தற்போது 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள்…

மேலும்...
SHAHEEN BAGH

CAA போராட்டக்காரர்களுக்கு உதவினால், அதோ கதிதான்! தில்லி காவல் துறை கொடூரம்!

ஸ்ரீநகர் (23 ஜூலை 2020):காஷ்மீரைச் சேர்ந்த சந்தீப் கோர்! தனது சகோதரர்மொஹிந்தர்பால் சிங்கிடமிருந்து ஒரு தொடர்பும் இல்லை. அவரிடமிருந்து ஒரு வார்த்தையும் கேட்க முடியவில்லை. அவரைச் சந்திக்க முடியாததால் அவளது கவலை ஒவ்வொரு நாளும் வளர்கிறது. அவரது சகோதரர், மொஹிந்தர்பால் சிங், 29 வயதான காஷ்மீர் சீக்கிய இளைஞர்! புது தில்லியின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜூன் 15 அன்று போராளி அமைப்பான காலிஸ்தான் விடுதலை முன்னணியுடன் (கே.எல்.எஃப்) தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தில்லி போலீசாரால் கைது…

மேலும்...

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று – ஒரே நாளில் 45,720 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (23 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் உச்சபட்சமாக ஒரே நாளில் 45,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகபாதிப்பு பதிவாகியுள்ள 5 மாநிலங்களின் பட்டியிலில், மகாராஷ்டிரா (10,576), ஆந்திர பிரதேசம் (6,045), தமிழகம் (5,849), கர்நாடகா (4,764) உத்தர பிரேதசம் (2,300) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்…

மேலும்...
Plasma Donation

பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றிய ஹைதராபாத் மோசடிப் பேர்வழி கைது!

ஹைதராபாத் (22 ஜூலை,2020): வஞ்சகப் புத்தி கொண்டோருக்கு, சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எப்படிப்பட்டதாக இருப்பினும் கவலை இல்லை. கொரோனா நெருக்கடியால் முழு உலகமும் குறிப்பாக நமது நாடும் தத்தளித்து கடும் நெருக்கடியில் இருக்க, இந்த சூழலிலும் ஜெகஜ்ஜால கில்லாடி ஒருவன், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மா அணுக்களைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிளாஸ்மா தெரபி மூலம் பிளாஸ்மா தானம் செய்வதாக சுமார் 200 பேரை ஏமாற்றியிருக்கின்றான். ஹைதராபாத்தில் வசிக்கும் சந்தீப் ரெட்டி என்பவன் 200-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி…

மேலும்...