இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த கொரோனா நோயாளி!

ஐதராபாத் (22 ஜூலை 2020): கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 63 வயதான அஃப்சர்கானுக்கு இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ், பராமரிப்பு மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீக் பட்நகர், இந்தியாவின் கொரோனா பாதித்து மீண்ட நோயாளிக்கு முதல் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளி அஃப்சர்கான், பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதி பட்டு வந்துள்ளார்….

மேலும்...
Advani

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராக அத்வானி-க்கு உத்தரவு!

தில்லி (20ஜூலை,2020):இந்திய ஜனநாயகத்தின் மீதான கடுந்தாக்குதலுக்கும், அதன் மதச்சார்பின்மையை அசைத்துப் பார்த்ததுமான பெரும் வெட்ககரமான சம்பவம் பாபரி மஸ்ஜித் இடிப்பு! இது தொடர்புடைய வழக்கில் முதல் குற்றவாளியாக இருப்பவர் முன்னாள் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி! பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டப்படும் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த சி.பி.ஐ. விசாரணை தனியாக நடந்து வருகின்றது. இதற்குறிய சிறப்பு நீதிமன்றத்தில், வரும் 24-ஆம் தேதி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக…

மேலும்...
INNERAM.com 2

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா..?

சென்னை (20ஜூலை,2020): “என்னப்பா இது டெய்லி வீட்டுக்கு ஆவின் பால் தானே போடுவே, இதென்ன அதானி பால்? “மன்னிக்கவும் சார் ஆவினை அதானி வாங்கிட்டாங்க..!: ———– “என்னப்பா தி இந்து தமிழ் நாளிதழ் நாங்க வாங்கறதில்லையே இப்போ எதுக்கு அதைக் கொண்டு வந்து போடுற?” “விஷயம் தெரியாதா சார் ஹிந்துவை இப்போ ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாங்கிடுச்சு இனி நாட்டில் இந்த ஒரே நியூஸ் பேப்பர் மட்டும் தான்.!” ————- “கேபிள்காரரே வெறும் சங்கரா டிவி.. காசி…

மேலும்...

2027க்குள் இந்தியாவில் 157 தனியார் ரயில்கள்! – இந்திய ரயில்வே அறிவிப்பு!

புதுடெல்லி (20 ஜூலை 2020): ரயில்வே சேவையில் தனியாருக்கு இடமளிக்கும் வகையில் 157 ரயில் சேவைகள் தனியார்மயமாக்க இருப்பதாக ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ம் ஆண்டிற்குள் 157 தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டில் 12 ரயில்களும், 2024ல் 45 ரயில்களும், 2026ல் 50 ரயில்களும், 2027ம் ஆண்டில் 44 ரயில்களும் என…

மேலும்...
Delhi_Riots

தில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம்! தில்லி உண்மையறியும் குழு அறிக்கை!

தில்லி (19 ஜூலை,2020):கடந்த பிப்ரவரி மாதம் தில்லி-யின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் கலவரங்கள் குறித்து தில்லி மைனாரிட்டி கமிஷன் அமைத்த உண்மை அறியும் குழு, அந்தக் கலவரத்துக்கான முழுமூல காரணங்களாக பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களை ஆதாரங்களுடன் முன்னிறுத்தியிருக்கின்றது. மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட CAA_NRC_NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, அமைதியான முறையில் எதிர்க்கும் வகையில் தில்லி-யில் ஷாஹீன் பாக் அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ,…

மேலும்...

இராமர் நேபாளத்தில் பிறந்ததை நிரூபிப்போம் – நேபாள அரசு மீண்டும் அதிரடி!

காத்மண்டு (19 ஜூலை 2020): இராமர் நேபாளத்தில் பிறந்ததை தொல்லியல் அகழாய்வு மூலம் நிரூபிக்கவுள்ளதாக நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி, இந்து கடவுளான இராமர் அவதரித்த இடம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இராமனை முன் வைத்து பாஜக ஆட்சிக் கட்டில் ஏறியது. ஆனால் இராமர் பிறந்த அயோத்தி நகரம் இருப்பது நேபாள நாட்டின் எல்லையோர நகரமான பிர்கஞ்ச் அருகேயுள்ள தோரி கிராமத்தின் அருகே இருக்கிறது என்று நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி…

மேலும்...
Roorki/IIT Violence/Nigeria

மாணவர் மீது பயங்கர தாக்குதல்! ஐ.ஐ.டி.இயக்குநர் கைது!

உத்தர்கண்ட் (18 ஜூலை,2020): உத்தர்கண்ட் மாநிலம், ரூர்கீ ஐ.ஐ.டி.யில் பயின்று வந்த நைஜீரியா மற்றும் கானா நாட்டு இரட்டை குடியுரிமை பெற்ற மாணவர் மீதும் அவருடைய சக மாணவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஐ.ஐ.டி. இயக்குநர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா நெருக்கடியால் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த மாணவர் அதனையும் மீறி வெளிச் சென்றதால் தனியார் பாதுகாப்பு ஏஜென்சியினர் உதவியுடன் அவர்கள் மீது தாக்குதல்…

மேலும்...
Aishwarya-Aaradhya

ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை (17 ஜூலை,2020): முன்னாள் உலக அழகியும், நடிகர் அமிதாப்பச்சன் மருமகளுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே, அவருடைய கணவருக்கும், மாமனாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், ஐஸ்வர்யா ராயும் அவரது மகளான ஆராத்யா பச்சனும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவருக்கும் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நடிகர் அமிதாப் பச்சன்…

மேலும்...
CORONA-India

ஒரு மில்லியனைத் தொட்டது, கொரோனா பாதிப்பு:..!

தில்லி (17 ஜூலை 2020):இன்று வெள்ளிக்கிழமை, இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்ப்பட்டடோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டதாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக்கணக்கு தெரியப்படுத்துகின்றது. கொரோனா பாதிப்பு ஆரம்பித்து, முதல் நான்கு மாதங்களில் அரை மில்லியன் அளவைத் தொட்டிருந்த இந்த பாதிப்பு, அடுத்த அரை மில்லியன் கணக்கைத் தொடுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் வெறும் மூன்றே வாரங்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெயிளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 30 அன்று இந்தியாவில்…

மேலும்...

பிளாஸ்மா கொடை அளித்த முஸ்லிம்கள்;மீண்ட கொரோனா நோயாளிகள்!

மலப்புரம் (17 ஜூலை 2020): கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அளித்த பிளாஸ்மா மூலம் 32 கொரோனா நோயாளிகள் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுகுறித்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியின் கோவிட் 19 மருத்துப் பிரிவின் உயர் அதிகாரி, டாக்டர் ஷினாஸ் பாபு கூறுகையில், “ஏற்கனவே முஸ்லிம்கள் வழங்கிய பிளாஸ்மா மூலம் 32 பேர் பலனடைந்துள்ளனர். மேலும் 250 முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன்வந்துள்ளனர்.” என்றார். மேலும் ,”எங்கள் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வருபவர்கள் அனைவரையும்…

மேலும்...