Supreme court of India

நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

புதுடெல்லி (21 ஆக 2020): பேச்சுரிமை, கருத்துரிமைகள் மறுக்கப்படடுகின்றன. என்று பிரஷாந்த் பூஷன் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து…

மேலும்...

தப்லீக் ஜமாத் மர்கஸில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை!

புதுடெல்லி (19 ஆக 2020): நாடெங்கும் தப்லீக் ஜமாத் மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, மும்பை, ஐதராபாத்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் மலப்பள்ளி ஹபீப் நகர் மற்றும் இத்ரே மில்லியா ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் – ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஆக 2020): இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுளாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020ம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025ம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு!

திருவனந்தபுரம் (18 ஆக 2020): கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 20 வீடுகள் நிலச்சரிவில் முழுவதும் சேதமானது. இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பத்து நாட்களைக் கடந்தும் இன்னும் மீட்புப்பணி நடைபெற்றுவரும் நிலையில், தினமும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அப்பகுதியில்…

மேலும்...

கொரோனாவின் விளைவு – இப்போது இவற்றை கழுவும் திரவமும் மார்கெட்டில் வந்துவிட்டது!

ஐதராபாத் (18 ஆக 2020): கொரோனா வந்தது மனித வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. மனிதன் குளிக்கிறானோ இல்லையோ, சானிட்டைஸர் உபயோகம் அத்தியாவசியமாகிவிட்டது. எங்கு போனாலும், கை கழுவு, சானிட்டைஸர் உபயோகம் செய் என்பதாகவே அறிவிப்புகள் இருந்தபடி உள்ளன. இந்நிலையில் காய்கறி, மற்றும் பழங்களை சாதாரண தண்ணீரில்தான் கழுவிக் கொண்டு இருந்தோம், ஆனால அதிலும் பாக்டீரியாக்கள், வைரஸ் போன்றவை 100 சதவீதம் வெளியாவதில்லையாம். அதனால் இப்போது இவற்றை சுத்தம் செய்யும், திரவமும் மார்கெட்டில் அறிமுகமாகிவிட்டது. இவற்றிற்கான…

மேலும்...

பாஜகவில் இணைந்த ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் – ஆம் ஆத்மி பாஜக மீது புகார்!

புதுடெல்லி (18 ஆக 2020): சிஏஏ எதிர்ப்பு, டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டெல்லி ஷாஹீன்பாக் போராட்டம் பாஜக திட்டமிட்டு நடத்திய சதி என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேசிய தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 24 மணி நேரமும் 101 நாள் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை பின்பற்றி நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது….

மேலும்...

கொரோனா வைரஸ் – அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (18 ஆக 2020): கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அமித் ஷாவுக்கு மீண்டும்…

மேலும்...

டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனை மேலும் நீட்டிப்பு!

லக்னோ (16 ஆக 2020): சிஏஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர் கஃபீல்கான் மீதான சிறைத் தண்டனையை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்திரப்பிரதேச அரசின் உள்துறை செயலாளர் வினய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “அலிகார் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்ட ஆலோசனை வாரியம் ஆகியவை அளித்த பரிந்துரையில், கஃபீல் கான் தொடர்ந்து பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது” என…

மேலும்...

முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் – பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

பெங்களூரு (14 ஆக 2020): “முஸ்லிம் இளைஞர்களால்தான் நன் உயிருடன் இருக்கிறேன்” என்று பெங்களூரு கலவரத்திற்கு காரணமான நவீனின் தாய் ஜெயந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், முகநூல் பதிவு ஒன்று கலவரத்திற்கு வித்திட்டது. இந்த கலவரத்தில் மூவர் உயிரிழந்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை எழுதிய நவீனின் தாயாரும் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சகோதரியுமான ஜெயந்தி கூறியதாவது: “கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நானும் என் மகளும் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது…

மேலும்...
Ram Mandir

மோடியுடன் இராமன் கோவில் விழாவில் கலந்துகொண்ட சாமியாருக்கு கொரோனா..

புதுதில்லி (13 ஆக 2020):இராமன் கோவில் பூமி பூஜை-க்கான விழாவின்போது மோடியுடன் அந்த பூஜையில் கலந்துகொண்ட நிருத்ய கோபால் தாஸ் சுவாமி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இவர் இராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கின்றார். பிரதமர் மோடியுடன் அந்த பூஜையில் அவர் கலந்துகொண்டபோது எடுக்ப்பட்ட படங்களில் அவர் முகத்திரை அணியாமல் பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக இருந்த கைகுலுக்கிக் கொள்ளும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவ்விழாவில் உ.பி. முதல்வர்,கவர்னர் ஆகியோரும்…

மேலும்...