Rahul and Modi

முதலில் பொய்க் குப்பைகளை சுத்தப்படுத்துங்கள்!-மோடி மீது ராகுல் காட்டம்

புதுதில்லி (12 ஆக 2020):குப்பைகள் இல்லா தேசம் என்ற பிரதமரின் சுதந்திர தினத் திட்டத்தை விமர்சித்துள்ள ராகுல் காந்தி முதலில் பொய் குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் பிரதேசத்தின் 74-ஆவது சுதந்தர தினம் நெருங்கி வரும் வேளையில், தற்போதைய நெருக்கடியான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பான முறையில் சுதந்தர தினத்தைக் கொண்டாட மிக நேர்தியான வகையில் ஏற்பாடுகள் செய்ய அந்தந்த மாநிய அரசுகள் முயன்று வருகின்றன. இதற்கிடையே…

மேலும்...
Violence KG Halli

பெங்களூரு-வில் கலவரம்..! பதற்றமான சூழல்..!!

பெங்களூரு (12 ஆக 2020): காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச மூர்த்தி-இன் உறவினர் ஒருவர் இஸ்லாத்தின் தூதர் குறித்து தரக்குறைவான Facebook இடுகை ஒன்றை பதிவிட்டிருக்கின்றார்.இதன் காரணமாக பெங்களூரு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கே.ஜி. ஹள்ளி பகுதியில் ஒன்று கூடினர். நவீன் என்ற அந்த நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தனது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருக்கின்றார் நவீன். போலீஸார் அவரைக் காவலில் எடுத்து இது குறித்து அவரிடம்…

மேலும்...
Sanjay Dutt

பிரபல இந்தி நடிகருக்கு புற்று நோய் இறுதி நிலை..!

மும்பை (11 ஆக 2020):பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு நுரையீரல் புற்று நோய் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக அவருடைய ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர் சில காலம் சிறைத் தண்டனை அனபவித்து வந்தார். 80,90-களில் இந்தித் திரையலகில் குறிப்பிடத்தக்க வகையில் பிரபல்யமடைந்திருந்த இவர் புகழ் பெற்ற இந்தி திரையுலக ஜாம்பவான்களான நர்கிஸ்-சுனில் தத் தம்பதியினரின் மகன்…

மேலும்...

வீட்டுக்குள் வந்த இறந்த மனைவி – மகிழ்ச்சிக் கடலில் கணவர்!

பெங்களூரு (11 ஆக 2020): விபத்தில் இறந்த மனைவி தத்ரூபமாக அதே வடிவில் வீட்டுக்குள் இருக்க, குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் உள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய சம்பவம் இதோ: கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இதனை அடுத்து கிருஷ்ணன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்நிலையில்…

மேலும்...
Supreme court of India

‘குடும்பச் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு’ உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுதில்லி (11ஆக 2020):‘குடும்பச் சொத்தில் ஆண் பிள்ளைகளைப்போல பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது…

மேலும்...

முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (10 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “உடல் பொதுவான சோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு…

மேலும்...
Modi-Shivsena

மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

மும்பை (09 ஆக 2020):உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய கடுமையான பாதிப்புக்களினால், பல நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதார பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு என மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இந்நிலை மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மக்கள் பலரும் தமது வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையைக்கூட நடத்த முடியாத அளவுக்கு ஒருவேளை சோற்றுக்குக் கூட கஷ்டப்பட்டு வரும் நிலைமைகளும் உருவாகி வருகின்றன. வைரஸ்…

மேலும்...

அமித்ஷாவின் கொரோனா ரிசல்ட்? – வெளியான பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஆக 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் என செய்தி வெளியான நிலையில், இரண்டொரு நாளில் கொரோனா மறு பரிசோதனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.. பாஜக எம்பி மனோஜ் திவாரி, வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்தார் என்றும், பரிசோதனையில் நெகடீவ் என வந்ததாக கூறியிருந்தார். இது பாஜகவினரையும், அவரது குடும்பத்தினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே அடுத்த இரண்ரொரு நட்களில் அமித்ஷாவுக்கு கொரோனா…

மேலும்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

திருவனந்தபுரம் (09 ஆக 2020) கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  இடுக்கியில் அமைந்திருக்கும் மூணாறு ராஜமலா பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்டப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால்…

மேலும்...

இரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன?

கோழிக்கோடு : துபையிலிருந்து கேரளாவிலுள்ள கரிப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையிலிருந்து விலகியபோது ஏற்பட்ட விபத்தில் இரு துண்டுகளாக விமானம் பிளந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்துள்ளனர். கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமான நிலைய ஓடுபாதை குறுகியது. இதில், விமானத்தைத் தரையிறக்குவது துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையேல் பெரும் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டு. வந்தே பாரத் மிஷனில் இன்று இரவு 7.41 மணிக்கு துபையிலிருந்து 191 பயணிகளுடன் ஏர் இந்தியா…

மேலும்...