சொந்த சகோதரியை வன்புணர்ந்த கொடூர சகோதரன்!

ஜெய்ப்பூர் (24 மே 2020): ராஜஸ்தானில் சொந்த தங்கையை சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து வன்புணர்ந்து கொலை செய்துள்ளான். ஜெய்ப்பூர் மாவட்டம் மனோஹர்பூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு ஒரு சாக்கடையில் கிடப்பது தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனையில் அப்பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை..!

புதுடெல்லி (24 மே 2020): இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக 6,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத…

மேலும்...

கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...

புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...

நெஞ்சை பிழியும் சம்பவம்: பசி பட்டினி – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 9 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் , நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. இவர்களில் தினக்கூலிகள் கையில் உணவு,பணம் எதுவும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் வரங்கல் புறநகர் கிணற்றில் மொத்தம் 9 புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். இவர்களின் உடம்பில்…

மேலும்...

தொடங்கும் விமான போக்குவரத்து – மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் அஸ்ஸாம் மாநில பாஜக அரசு!

புதுடெல்லி (22 மே 2020): உள்ளூர் விமான போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில் அஸ்ஸாம் வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அஸ்ஸாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் முடங்கிக் கிடக்கும் விமான சேவையானது, வரும் மே 25 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. ஆனால் அ “சிறிய நேரம் கொண்ட பயணங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இருக்காது. இது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். உள்ளூர் விமானங்கள் மூலம் வருபவர்களை 14…

மேலும்...

அதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா!

கொல்கத்தா (21 மே 2020): கொல்கத்தாவில் இனப்பாகுபாடு காட்டுவதாகக் கூறி 300 செவியிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில்…

மேலும்...

உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்!

புதுடெல்லி (21 மே 2020): உள்நாட்டு விமான சேவை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயணிகளுக்கான நடைமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல், பெரும்பாலான விமானங்கள், விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

மேலும்...

உள்நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிப்பு!

புதுடெல்லி (21 மே 2020): இந்தியாவில் உள் நாட்டு விமான கட்டணம் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு அளவைப் பொறுத்து பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது முடக்கம்…

மேலும்...

நீ முஸ்லிம் என்று நினைத்து அடித்தோம் – கா(வி)வல்துறையின் மத துவேஷ பதில்!

போபால் (20 மே 2020): காவல்துறையில் ஊடுருவியுள்ள காவிகளை அடையாளம் காட்டியுள்ளது இன்னொரு சம்பவம். மத்திய பிரதேசத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தீபக் பந்துலே என்ற வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ள போலீசார், “உங்களை முஸ்லிம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினோம்” என்று மத துவேஷத்துடன் காரணம் கூறியுள்ளது. இதுகுறித்து கூறிய தீபக் பந்துலே கூறியிருப்பதாவது: “நான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன்….

மேலும்...