டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் அவசர உத்தரவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தினை குறித்து நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உடனடியாக அளிக்கவேண்டிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு நள்ளிரவில் நடந்த விசாரணையில், டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது. நீதிபதி எஸ். முர்லிதரின் இல்லத்தில், காயமடைந்தவர்களுக்கு போதுமான வசதிகள் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற அவசர வேண்டுகோளின் பேரில் இந்த…
