மாணவனின் மதம் என்ன என்று கேட்ட பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை ஆவேசம்!

திருவனந்தபுரம் (22 பிப் 2020): கேரளாவில் பள்ளியில் சேர்க்கச் சென்ற மகனின் மதம் என்ன என்று கேட்டதால் பள்ளி நிர்வாகம் மீது ஆவேசம் அடைந்தார் நசீம் என்பவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர். அந்த பள்ளியின் விண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதத்தின் பெயரை குறிப்பிட…

மேலும்...

நேருவின் வரலாற்றை அழிக்க முடியாது – மன்கோகன் சிங்!

புதுடெல்லி (22 பிப் 2020): ” நேரு உருவாக்கிய பாரத் மாதாகி ஜே என்ற வாசகம் ஒரு சாராரால் தவறாக பயன்படுத்தப்படுகிறது,” என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் மற்றும் உரைகள் குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்திய கூட்டத்தில் உரையாற்றிய மன்மோகன் சிங், பாஜகவை நேரடியாகவே குற்றம் சாட்டினார். மேலும் அவர் பேசுகையில், “நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். உண்மையில் அவரை நினைத்து பெருமைப் படுகிறேன்….

மேலும்...

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு (22 பிப் 2020): ஜம்மு காஷ்மீரின் பிஜ்பேஹரா அருகே சங்கம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை. ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்...

மற்றும் ஒரு குஜராத் மாடல் அதிர்ச்சி – பெண்களை நிர்வாணமாக்கி சோதனை!

சூரத் (22 பிப் 2020): குஜராத்தில் மருத்துவமனை ஒன்றின் பணியாளர்களுக்கு உடற்தகுதி சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கம் தனது புகாரில் கூறி உள்ளதாவது:- மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்த பெண்கள் சோதனைக்காக அறையில் ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேரையும் குழுவாக நிர்வாணமாக நிற்க வைத்ததுள்ளார்கள். மற்றவர்களுடன் நிர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்தும் இந்த செயல் மிகவும் இழிவானது. அவர்களது முறை…

மேலும்...

பாஜக பி டீம் – உறுதி படுத்துகிறதா ஆம் ஆத்மி?

புதுடெல்லி (21 பிப் 2020): ஆம் ஆத்மி கட்சி தற்போது பாஜக எதிர்ப்பிலிருந்து சற்று விலகி இருப்பதாகவே சமீபத்திய நகர்வுகள் தெளிவு படுத்துகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஹனுமான் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை என்பது அவரவரவர் விருப்பம் என்பதால் இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவரப் பரத்வாஜ் கூறியிருக்கும் கருத்துதான் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ‘பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்’ என உச்ச…

மேலும்...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த இந்திய கடற்படை வீரர்கள் கைது – அமைதி காக்கும் ஊடகங்கள்!

மும்பை (21 பிப் 2020): பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக உளவு பார்த்த இதிய கடற்படை வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை, கார்வா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ இவர்களை கைது செய்துள்ளது. கைதானவர்கள், சதீஸ் மிஸ்ரா, தீபக் திரிவேதி, ரிங்கோ தியாகி, தேவ் குப்தா, சஞ்சீவ் குமார், பப்லு சிங், ராகுல் சிங், சஞ்சய் ராவத், ரிஸி மிஸ்ரா மற்றும் வேத்ராம் ஆகியோர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில்…

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரம் – உத்தவ் தாக்கரே- மோடி, சோனியா காந்தி திடீர் சந்திப்பு!

புதுடெல்லி (21 பிப் 2020): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளார். குடியுரிமை சட்டம் காரணமாக நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கடசிகள் மகாராஷ்டிராவிலும் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே சிஏஏ குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என உத்தவ் தாக்கரே சமீபத்தில்…

மேலும்...

பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண் – ஆவேசப்பட்ட உவைசி!

பெங்களூரு (20 பிப் 2020): சி ஏஏ எதிர்ப்பு பேரணியில் பெண் ஒருவர் பகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டதற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் குடியுரிமைசட்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் அசாதுத்தீன் உவைசியும் கலந்து கொண்டார். அப்போது, அமுல்யா என்ற பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனால் ஆவேசமடைந்த உவைசி, அந்த பெண் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இவர் எங்கள் அணியில்…

மேலும்...
shaheen-bagh

போக்குவரத்துக்கு நாங்கள் இடையூறல்ல போலீஸ்தான் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் – (VIDEO)

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் யாரும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை போலீஸ்தான் வழியை அடைத்து வைத்துள்ளது என்று ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம்…

மேலும்...

விழி பிதுங்கி நிற்கும் மோடி அமித் ஷா – தெலுங்கானா மாநிலமும் கை விரிப்பு!

புதுடெல்லி (20 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப் பட்டது முதலே மத்திய அரசு தேன் கூட்டுக்குள் கைவிட்ட நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிக்கும் இந்தியாவிற்கு இச்சட்டம் அவசியம்தானா என பாஜகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களில் சிலரும் மத்திய அரசை கேள்வி கேட்க தொடங்கினர். இந்நிலையில் இச்சட்டத்தை…

மேலும்...