டொனால்ட் ட்ரம்பின் குஜராத் நிகழ்ச்சிகள் ரத்து!

புதுடெல்லி (20 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் நிலையில் தாஜ்மகாலை பார்க்க விரும்புவதால் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற திங்கட்கிழமை (24-ந்தேதி) இந்தியா வருகிறார். “ஏர்வோர்ஸ்” சிறப்பு விமானம் திங்கட்கிழமை மதியம் 11.55 மணிக்கு ஆமதாபாத் வந்து சேரும். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு செல்கிறார். குஜராத் பயணத்தின் போது மோதிரா கிரிக்கெட்…

மேலும்...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா?- தூக்கிலிருந்து தப்பிக்க மீண்டும் முயற்சி!

புதுடெல்லி (20 பிப் 2020): நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி தூக்கு தண்டனையை தள்ளிப் போட மீண்டும் முயற்சி செய்துள்ளார். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா,…

மேலும்...

பாலியல் வழக்கில் தொடர்ந்து சிக்கும் பாஜக பிரபலங்கள் !

லக்னோ (20 பிப் 2020): பாலியல் வழக்கில் இன்னொரு பாஜக பிரபலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி தேர்தலின்போது என்னை ஒரு ஹோட்டலில்…

மேலும்...

தலித் இளைஞர்களின் மர்ம உறுப்பில் ஆயுதங்களை செலுத்தி சித்ரவதை!

ஜெய்ப்பூர் (20 பிப் 2020): ராஜஸ்தானில் திருடியதாக கூறி தலித் இளைஞர்கள் இருவரின் மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்குரூ டிரைவரை செலுத்தி, சித்ரவதை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகவ்ர் மாவட்டத்தில் இரண்டு தலித் இளைஞர்கள், இருசக்கர வாகன ஷோரூமில் பணம் திருடியதாக ஷோரூம் ஊழியர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் இருவரையும் கட்டி வைத்து மர்ம உருப்பில் பெட்ரோல் ஊற்றி, ஸ்க்ரூ டிரைவரை செலுத்தி சித்ரவதை படுத்தியுள்ளனர். இந்த வீடியோவும்…

மேலும்...

ராமர் கோவில் அறக்கடளைக்கு மோடியின் முன்னாள் செயலர் கோவில் கட்டுமான குழு தலைவராக தேர்வு!

புதுடெல்லி (19 பிப் 2020): அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன் முதல் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது. அதில், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, . பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மகந்த் நிருத்ய கோபால் தாஸ் அறக்கட்டளையின் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச்…

மேலும்...

பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

லக்னோ (19 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு…

மேலும்...

இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள் – கருணாஸ்!

சென்னை (18 பிப் 2020): இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், என்று நடிகர் எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணரப் பேட்டை ஷஹீன் பாக் போராட்டத்தில் கருணாஸ் கலந்து கொண்டு பேசும்போது ‘ நான் அரசியல் வாதியாகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இங்கு வரவில்லை, ஒரு மனிதனாக உங்களுடன் நிற்கின்றேன் . இந்தியாவின் பன்முகத் தன்மை அடையாளத்தை அழிக்கும் சட்டத்தை எதிர்ப்பது நியாமான போராட்டம் என்றும், இந்தியர்களில் முதன்மையானவர்கள் இஸ்லாமியர்கள், வரலாறுகளை நீங்கள் மறைக்க முடியாது என்றும் கூறினார். நாளை…

மேலும்...

டெல்லியில் தோல்வி அடைந்தும் திருந்தவில்லையா? – மோடிக்கு உத்தவ் தாக்கரே அட்வைஸ்!

மும்பை (18 பிப் 2020): “குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறப் போவதில்லை என்று திரும்ப திரும்பகூறுவதால் கைதட்டல் கிடைக்கலாம் ஆனால் ஓட்டு கிடைக்காது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, “எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், சிஏஏ, காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து திரும்ப திரும்பபெறப்போவதில்லை” என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ” நாட்டில் பல விவகாரங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துங்கள்….

மேலும்...

பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே இருக்கிறோம் – இந்தியா வந்துள்ள பாக் இந்துக்கள் கருத்து!

ஹரித்வார் (18 பிப் 2020): பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே வாழ்கிறோம் என்று பாகிஸ்தானிலிருந்து அரித்வார் வந்துள்ள இந்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு அரசியல் விளையாட்டு என்று தெரிவித்துள்ள அவர்கள், உண்மையில் பாகிஸ்தான் இந்துக்கள் மீது இந்திய அரசுக்கு அனுதாபம் இருப்பின், இந்தியா வரும் இந்துக்களுக்கு விசா நடைமுறைகளை இலகுவாக்கினாலே போதும். என்றனர். நாங்கள் இந்தியாவுக்கு யாத்திரை வரவேண்டும் என்றல்…

மேலும்...

முஸ்லிம்களின் தொப்பி அணிந்து சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ்!

கண்ணூர் (18 பிப் 2020): கேரளாவில் சிஏஏ பேரணியில் முஸ்லிம்களின் தொப்பி அணிந்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் சுவாமி அக்னிவேஷ். மதரீதியில் பிளவை ஏற்படுத்தும் இந்தியாவின் குடியுரிமை திரருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக்காக மாறிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று கேரளாவின் கண்ணூரில் “அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” என்ற பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று…

மேலும்...