இந்தியாவில் கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

திருவனநதபுரம் (30 ஜன 2020): கேரள மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில். சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹானிலிருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கோட்சேவும் மோடியும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் – ராகுல் காந்தி தாக்கு!

வயநாடு (30 ஜன 2020): பிரதமர் நரேந்திர மோடியும் நாதுராம் கோட்சேவும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் நாடளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி தனது மக்களவைத் தொகுதியான கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள கல்பேட்டாவில் ‘அரசியலமைப்பைச் பாதுகாப்போம்’ என்னும் குடியுரிமை மற்றும் மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான பேரணி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்….

மேலும்...

டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது!

மும்பை (30 ஜன 2020): டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் மீது சென்ற மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல குழந்தைகள் பலியான நிலையில் ஆக்சிஜனுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்தபோதும் அவர் மீது வழக்கு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

லண்டன் (30 ஜன 2020): இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் 5 அமைப்புகள் சார்பில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் விடுத்த அறிவிப்பில், சிஏஏ என்பது அடிப்படையில் பாகுபாட்டுடன் இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் இந்தச் சட்டம் , சர்வதேச மனித உரிமை விதிகளுக்கும், இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே 2005…

மேலும்...

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சோனியா காந்தி, பிரதமர்,ஜனாதிபதி மரியாதை!

புதுடெல்லி (30 ஜன 2020): மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதையொட்டி, புது தில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்…

மேலும்...

தந்தையின் கொலை வழக்கில் முதல்வர் மீது அவரது சகோதரி புகார்!

ஐதராபாத் (30 ஜன 2020): ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன ரெட்டி மீது அவரது சகோதரி புகார் அளித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தம்பியுமான விவேகானந்த ரெட்டி கடந்த வருடம் மார்ச் மாதம், அதாவது ஆந்திர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தன் வீட்டில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போது எதிர் கட்சி வரிசையில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி இந்த கொலையை சிபிஐ விசாரிக்க…

மேலும்...

கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காதாம்!

புதுடெல்லி (30 ஜன 2020): கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் இருந்து விமானம் மூலம் அதிக பயணிகள் வரும் நாடுகளின் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து, கரோனா வைரஸ் பரவும் அதிக ஆபத்து நிறைந்த 30 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சௌதாம்டன் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் இந்த பட்டியலில், கரோனா வைரஸ் பரவும் ஆபத்து நிறைந்த நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் பட்டியலில் 23வது இடத்தில்…

மேலும்...

அர்ணாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக ஸ்பைஸ் ஜெட் விமானம் பகீர் முடிவு!

மும்பை (29 ஜன 2020): அர்ணாப் கோஸ்வாமியை விமானத்தில் கேள்வி கேட்டதற்காக பிரபல பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ராவுக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கம்ராவுக்கு தடை விதித்துள்ளது. டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்….

மேலும்...

சுடப்படும் இடத்தை சொல்லுங்கள் நான் தயார் – அனுராக் தாக்கூருக்கு அசாதுத்தீன் உவைசி சவால்!

மும்பை (29 ஜன 2020): “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுட வேண்டுமெனில் என்னை சுடுங்கள்” என்று ‘ஆல் இந்தியா மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமிமன்’ (AIMIM) தலைவர் அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் ஆத் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. டெல்லியில் மாணவர்கள்…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...