போராட்டக் களத்தில் கொண்டாடப் பட்ட குடியரசு தினம் – மக்கள் வெள்ளம் (வீடியோ)

புதுடெல்லி (27 ஜன 2020): டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டம் 40 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் போராட்டக் களத்தில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் காலை பல லட்சக் கணக்கானோர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதையுடன் பல லட்சம் மக்கள் நின்று மரியாதை செய்தது அனைவரையும் நெகிழச் செய்தது. அரசு ஷஹீன் பாக்…

மேலும்...

குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல – கிறிஸ்தவ சர்ச்சில் தீர்மானம்!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): “மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல!…” என்று லத்தின் கத்தோலிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவனந்தபுரம் கத்தோலிக் கிறிஸ்தவ தேவாலய ஆயர் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் முன்னிலையில், தேவாலய தீர்மான கடிதம் ஒன்றை வாசித்தார். அதில், “இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல… ஒட்டு மொத்த இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் எதிராக போராட நாம் தயாராக…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் பங்குபெற்ற மனித சங்கிலி!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 620 கிலோ மீட்டர் தூரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறாது இந்த சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டத்தை திரும்பப் பெறவலியுறுத்தியது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் சிஏஏ சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று…

மேலும்...

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்தாயிரம் மசூதிகளில் பறந்த தேசிய கொடி!

திருவனந்தபுரம் (26 ஜன 2020): இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கேரள மாநிலத்தில் அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப் பட்டது. காலை டெல்லி ராஜபாதையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போா் நினைவிடத்தில்…

மேலும்...

நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (26 ஜன 2020): பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஆளும் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார். அவரது நண்பரும், ஊடகவிலாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதில் அவர் மிகவும் வேதனை அடைந்தார். அதற்கு காரணம் இந்துத்வா அமைப்பினர் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். இந்நிலையில் பிரகாஷ் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது….

மேலும்...

அனாதை உடல்களை அடக்கம் செய்யும் முஹம்மது ஷெரீபுக்கு பத்ம ஸ்ரீ விருது!

புதுடெல்லி (26 ஜன 2020): மத்திய அரசின் பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவர் 80 வயதான முகமது ஷரீப். உ.பி.,யில் ஜாதி மத பேதமற்று பல ஆதரவற்ற உடல்களை இவர் அவரவர் மத வழக்கப்படி அடக்கம் செய்துள்ளார். இவரின் சேவைக்காக…

மேலும்...

குடியரசு தின விழாவில் அய்யனார் சிலையில் காணாமல் போன பூணூல்!

புதுடெல்லி (26 ஜன 2020): இந்தியாவின் 71 வது குடியரசு தினம் இன்று கோலாகளமாக கொண்டாடப் பட்டது. டெல்லி ராஜ்பத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரேசில் அதிபர் பொல்சனாரூ,க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். முப்படைகள் உள்ளிட்ட பல மாநிலங்களின் வண்ணமயமான அலங்கார அணிவகுப்புகளும் இதில் இடம்பெற்றன. அந்த அணிவகுப்பில் தமிழக பாரம்பரிய கலையான கிராமியக்…

மேலும்...

குடியரசு தினத்தில் பயங்கரம் – ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு!

கவுஹாத்தி (26 ஜன 2020): இந்தியாவின் குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அஸ்ஸாமின் திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன பதிவில், “குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை…

மேலும்...

குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

புதுடெல்லி (26 ஜன 2020): குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள…

மேலும்...

குஜராத்தில் பாஜக மாணவர் அணி (ஏபிவிபி) படுதோல்வி!

அஹமதாபாத் (26 ஜன 2020) குஜராத் மத்திய பல்கலைக் கழக தேர்தலில் போட்டியில்ட்ட அனைத்து ஏபிவிபி மாணவர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் போட்டியிட்ட பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட ஐந்து மாணவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பிஸ்ரா அம்பேத்கர் புஹ்லே மானவர்கள் அணி, மற்றும் ஃபெடரேஷன்…

மேலும்...