குடியுரிமை சட்ட விவகாரத்தில் மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த சங்கராச்சார்யா பல்கலைக் கழகம்!

கொச்சி (21 ஜன 2020): கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கிடையே கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்தை…

மேலும்...

மீண்டும் ரிசர்வ் வங்கியில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் கேட்கும் மத்திய அரசு!

புதுடெல்லி (21 ஜன 2020): மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஏற்கனவே இருமுறை பணம் பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக ரூ. 30 ஆயிரம் கோடி பணம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியானது 2018-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடியும், 2019-ஆம் நிதியாண்டில் ரூ. 28 ஆயிரம் கோடியும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில் 2019-20 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடியை பங்கு…

மேலும்...

அடுத்த மூன்று நாட்களில் அது நடக்கும் – மம்தா பானர்ஜி அதிரடி!

கொல்கத்தா (21 ஜன 2020): “மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்!” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்ததோடு மத்திய…

மேலும்...

பத்திரிகைத்துறை மீது ஜனாதிபதி காட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): நாட்டில் பத்திரிகைத் துறை பொய் செய்திகளின் கூடாரமாக உள்ளதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது வழங்கும் விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில், விருதுகளை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். அவர் பேசுகையில், “பிரேக்கிங் நியூஸ் எனப்படும் செய்திகளை முதலில் அளிக்கும் பிணியால் ஊடகங்கள் பீடிக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டுப்பாடு, பொறுப்பு போன்ற பத்திரிகை தர்மத்தின் அடிப்படைகள் தகர்க்கப் பட்டுள்ளன. தரமான ஒரு செய்தியை…

மேலும்...

ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்!

புதுடெல்லி (21 ஜன 2020): வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 01-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் மின்னணு முறையில் செயல்படும் நியாய விலைக்…

மேலும்...

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு!

புதுடெல்லி (21 ஜன 2020): ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் பாஜக ஐ.டி செல் தலைவர் அமித் மால்வியா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள்…

மேலும்...

ஒழுங்கீனமாக நடந்த பாஜகவினர் கன்னத்தில் பளார் விட்ட கலெக்டர் – (VIDEO)

போபால் (21 ஜன 2020): போபாலில் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து ஒழுங்கீனமாக நடந்த பாஜகவை சேர்ந்தவர் கன்னத்தில் கலெக்டர் அறைந்ததால் பரபரப்பு ஏற்படது. மத்திய பிரதேசம் போபாலில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர்….

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் கள் தவிர்த்து அனைத்து மதத்தினரும் குடியுரிமை பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

மங்களூரு விமான நிலையத்தில் வெடிப்பொருள் – மர்ம நபருக்கு வலைவீச்சு!

மங்களூரு (20 ஜன 2020): மங்களூரு விமான நிலையத்தில் வெடிப் பொருள் வைத்த நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெடிப்பொருள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை பாதுகாப்பாக தொலைவில் எடுத்து சென்று நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர். மேலும் அந்த வெடி பொருளை வைத்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .

மேலும்...

ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் திட்டவட்டம்!

புதுடெல்லி (20 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடி வரும் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் ஜனவரி 22 உச்ச நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கின்றனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான…

மேலும்...