குடியுரிமைச் சட்ட திருத்தம் குறித்து கபில் சிபல் அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அமுல்படுத்த முடியாதவாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கேரளாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கபில் சிபல் “சிஏஏ நிறைவேற்றப் பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு…

மேலும்...

சோனியா காந்தி வீட்டு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

புதுடெல்லி (18 ஜன 2020): டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று சோனியா காந்தியின் வீட்டு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெறாவுள்ள டெல்லி சட்டப்பேரவஇ தேர்தலில் கராவல் நகர் மற்றும் படேல் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் அரவிந்த் சிங், ஹர்மன் சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே – ஆர் எஸ் எஸ்ஸின் அடுத்த திட்டம்!

மொராதாபாத் (18 ஜன 2020): குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், ‘இரண்டு குழந்தைகள்’ கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று…

மேலும்...

ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படுவது உண்மையா? – கோவில் நிர்வாகி விளக்கம்!

மும்பை (18 ஜன 2020): ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை வதந்தி எனக் கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவிலை மூடப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்படமாட்டாது என்று தெளிவுபடுத்த விரும்புவதாக சாயிபாபா கோவிலின் தலைமைச் செயல் அலுவலர் தீபக் முக்லிகர்…

மேலும்...

மோடியின் குடியுரிமை ஆவணங்கள் எங்கே? – தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி!

திருச்சூர் (18 ஜன 2020): பிரதமர் மோடியின் குடியுரிமை ஆவணங்களை காட்ட வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்கபப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை…

மேலும்...

மகாராஷ்டிர அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு – ஷீரடி சாய்பாபா கோயிலை மூட முடிவு!

மும்பை (18 ஜன 2020): ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகா் மாவட்டத்தில் சாயிபாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் அவருக்குக் கோவில் இருக்கிறது. இங்குள்ள சாயிபாபாவின் திருவுருவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனா். சாயிபாபா, தன் வாழ்நாளில் பெரும்பாலான தனது காலத்தைக் கழித்தது ஷீரடியில்தான். அவா் எங்கு பிறந்தாா் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. பா்பனி…

மேலும்...

சிறுமி பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண் அடித்துக் கொலை!

கான்பூர் (18 ஜன 2020): பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் கான்பூர் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டில் 13 வயது சிறுமி 6 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். ஆனால அவர் சிகிச்சை பலனிறி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட அந்த கும்பல் புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளது. இதையடுத்து, 13வயது…

மேலும்...

பல லட்சம் மக்கள் பங்கேற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்!

மங்களூரு (17 ஜன 2020): மங்களூரில் பல லட்சம் மக்கள் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள அடயார் கன்னூர் மைதானத்தில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின் பாக்க்கில்…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு – அதிரடி காட்டிய பஞ்சாப் அரசு!

சண்டீகர் (17 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், “இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம்!” என கேரளா ஏற்கனவே அறிவித்தது. அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கேரளாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டசபையில் இரண்டு நாள் சிறப்பு…

மேலும்...

வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு!

புதுடெல்லி (17 ஜன 2020): இந்திய வங்கிகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அதன் வசதி ரத்து செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியபடி, ஒரு வங்கிப் பயனாளர், தனது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை ஒருபோதும் மேற்கொள்ளாதவராக இருந்தால், அவருடைய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வசதியை ரத்து செய்யுமாறு…

மேலும்...