பாஜக புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு முன்னுரிமை!

லக்னோ (29 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக வெளியிட்டுள்ள புதிய வேட்பாளர் பட்டியலில் பிராமணர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 91 வேட்பாளர்கள் கொண்ட பாஜக பட்டியலில் 21 பிராமண வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் பல்வேறு சமூகங்களும் பாஜகவை கைவிட்டு வருகின்றன. விவசாயிகள் போராட்டத்தை அடுத்து பாஜகவுக்கு எதிராக பல சமூகங்கள் ஒன்றிணைவதும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. ஜாட் சமூகம் பாஜகவில் இருந்து விலகி நிற்கிறது. இதனால் 200 ஜாட் தலைவர்களை அழைத்து பாஜக விவாதித்தது….

மேலும்...

இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி பாஜக!

புதுடெல்லி (28 ஜன 2022): இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி பாஜக என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2019-2020 நிதியாண்டில் நாட்டிலேயே அதிக செல்வம் படைத்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. அசோசியேட்டட் டெமாக்ரடிக் சீர்திருத்தங்கள் (ADR) நாட்டின் பணக்கார அரசியல் கட்சிகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜகவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4847.78 கோடி. சொத்து மதிப்பில் மாயாவதியின் பிஎஸ்பி ரூ.698.33 கோடி சொத்துகளுடன் நாட்டின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. 588.16 கோடி சொத்துகளுடன் காங்கிரஸ் மூன்றாவது…

மேலும்...

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!

பெங்களூரு (28 ஜன 2022): கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவதியின் மகள் சவுந்தர்யா (வயது 30) இவர் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவரின் கணவர் மீரஜும் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்கள் பெங்களூருவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சவுந்தர்யாவின் வீட்டுக்கு வேலை செய்யும் பணிப்பெண்…

மேலும்...

மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு!

திருவனந்தபுரம் (28 ஜன 2022): மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஹிஜாப் அனுமதி கோரி எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரின் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அரசு, சீருடையில் மதச் சின்னங்களைச் சேர்ப்பது பொருத்தமற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இது தவறான செய்தியைக் கொடுக்கும் மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட பிற பிரிவுகளில் இருந்து இதே போன்ற கோரிக்கைகள் எழும் எனவே…

மேலும்...

கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய அமித் ஷா – வீடியோ!

லக்னோ (28 ஜன 2022): உத்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி, பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா வழிகாட்டல்முறைகள் எதனையும் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்குள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். #WATCH | Union Home Minister Amit Shah holds door-to-door campaign in Dadri, Gautam Buddha Nagar in…

மேலும்...

மதுக்கடையில் மது வாங்கிக்குடித்த 6 பேர் பலி!

ரேபரேலி (27 ஜன 2022): உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடையில் மது வாங்கி பருகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள பஹார்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் ஐவர் மற்றும் மூன்று கலால் துறை அதிகாரிகள் என 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று இரவு நடைபெற்ற விசேச நிகழ்வில் பங்கேற்ற சிலர் மதுபானம் வாங்கிப் பருகி…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கபில் கான் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக…

மேலும்...

உத்திரபிரதேச தேர்தலில் சிறை‌யி‌ல் இருந்தபடி போட்டியிடும் ஆசம்கான் நஹித் ஹசன்!

லக்னோ (25 ஜன 2022): உத்திரபிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முகமது ஆசம் கான் மற்றும் நஹித் ஹசன் ஆகியோர் சிறையில் இருந்தபடி போட்டியிடுகின்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான முகமது ஆசம் கான் அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆசம் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 2020 முதல் சிறையில் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில், அவரது மனைவி தன்சீன் பாத்திமா மற்றும்…

மேலும்...
Dr.Kafeel Khan-Gorakhpur

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார் – டாக்டர் கஃபீல் கான்!

லக்னோ (25 ஜன 2022): 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சட்டசபை தேர்தலில் என்னால் போட்டியிட முடியும். எந்த கட்சி எனக்கு டிக்கெட் கொடுத்தாலும்…

மேலும்...
CORONA-India

இந்தியாவில் சரியும் கொரோனா தொற்று!

புதுடெல்லி (25 ஜன 2022): இந்தியாவில் இன்றும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 50,190 குறைவாகும். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,67,753 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 22,36,842 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை…

மேலும்...