விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு – பாஜக அமைச்சர் மகன் மீது தாக்குதல்

பாட்னா (24 ஜன 2022): பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் பாஜக தலைவரும், மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான நாராயண் பிரசாத்தின் மகன் பப்லு குமாரை, துப்பாக்கி சூடு நடத்தியதாகக் கூறி கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பீகார் மாநிலம் மொஃபுசில் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹரடியா கோரி தோலா கிராமத்தில், அமைச்சரின் மகனை கிராம மக்கள் சிலர் தாக்குவதையும், அவர் வைத்திருந்த துப்பாக்கியை அவர்கள் பறித்துச் சென்ற காட்சிகளும் நேற்று வெளியாகின….

மேலும்...

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாசிட்டிவ்!

ஐதராபாத் (24 ஜன 2022): துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கையா நாயுடு ஒரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று துணை ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். நாயுடுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் அவருக்கு கொரோனா இருக்கும் செய்தியை உறுதிப்படுத்தினார். மேலும் அண்மைய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர்…

மேலும்...

பாஜகவால் 25 ஆண்டுகள் வீணாகிவிட்டன – உத்தவ் தாக்கரே!

மும்பை (24 ஜன 2022): பாஜகவுடனான கடந்த 25 ஆண்டுகால கூட்டணி வீணாகிவிட்டதாக சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவசேனா முக்கிய பிரமுகர்களுடனான ஆன்லைன் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, பாஜக நமது வீட்டிற்குள் நுழைந்து நம்மையே அழிக்க முற்பட்டு விட்டது. அதனாலேயே அக்கட்சியை விட்டு விலகினோம் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்துத்துவா வலிமைக்காக பாஜகவுடன் சிவசேனா இணைந்தது. சிவசேனா ஒருபோதும் இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியதில்லை. பாஜகவின் சந்தர்ப்பவாதம் இந்துத்துவாவை…

மேலும்...

கட்சி மாறமாட்டோம் – வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கிய காங்கிரஸ் தலைமை!

பனாஜி (23 ஜன 2022): கோவா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் கட்சி மாறமாட்டோம் என்று சத்தியம் வாங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி தலைமை. கோவா சட்டப்பேரவைக்கு கடந்தமுறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. ஆனால் இவர்களில் பலர் அடுத்தடுத்து காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதாவுக்கு மாறிவிட்டனர். இதனால் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது காங்கிரஸ் தரப்பில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிஞ்சியுள்ளனர். இந்நிலையில், அடுத்த…

மேலும்...

இரயிலில் சத்தமாக பேச, பாட தடை!

புதுடெல்லி (23 ஜன 2022): இரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக சத்தமாக பாடுவதையும் பேசுவதையும் தடை செய்து மத்திய இரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் யாரேனும் இதுகுறித்து புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இரயில்வே தெரிவித்துள்ளது. இயர்போன் இல்லாமல் பாட்டு கேட்கக்கூடாது, கைப்பேசியில் சத்தமாக பேசக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததையடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டு சரிபார்ப்பவர்கள், RPF அதிகாரிகள் மற்றும் கோச் உதவியாளர்கள்…

மேலும்...

கோவாவில் காலியாகும் பாஜக கூடாரம்!

பானஜி (22 ஜன 2022): கோவாவில் முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவை விட்டு விலக்கியுள்ள நிலையில் மேலும் 5 தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். பாஜகவின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின், சீட் கிடைக்காத தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரே இரவில், கோவாவில் ஐந்து முக்கிய பாஜக தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளனர். முன்னாள் முதல்வர் லக்ஷ்மிகாந்த் பர்சேகர், முன்னாள் அமைச்சர் தீபக் போஸ்கர், துணை சபாநாயகர் இசிடோர் பெர்னாண்டஸ்,…

மேலும்...

புஷ்பா திரைப்பட ஸ்டைலில் படுகொலை – சிறுவர்கள் அரங்கேற்றிய பயங்கரம்!

புதுடெல்லி (21 ஜன 2022): டெல்லியில் புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்த 3 சிறுவர்கள் அதே முறையில் 24 வயது இளைஞனை குத்திக் கொலை செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவர்கள் பிரபலம் அடைய அந்த இளைஞன் கொல்லப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிரவும் முடிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. புஷ்பா என்ற தெலுங்குப் படத்தைப் பார்த்து இந்தக் குற்றத்தைச் செய்யததாக காவல்துறையிடம்…

மேலும்...

கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் பஜகவிலிருந்து விலகல்!

பானஜி (21 ஜன 2022): கோவா பாஜக முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கரின் மகன் உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். மூன்று முறை கோவா முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மனோகர் பரிக்கர். இவரின் மகன் மகன் உத்பல் பரிக்கர். இவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது தந்தையின் தொகுதியான பானஜியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் பாஜக அவருக்கு சீட் தர மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமுற்ற உத்பல் பரிக்கர் பாஜகவிலிருந்து…

மேலும்...

கோவின் இணையதளத்தில் ரகசியங்கள் கசிவு – ஒன்றிய அரசு மறுப்பு!

புதுடெல்லி (21 ஜன 2022): கோவிட் தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட கோவின் செயலியில் இருந்து தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்திகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கோவின் செயலியில் தகவல் கசிவு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்; ஆனால் கசிவுக்கும் செயலிக்கும் தொடர்பில்லை என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. கோவின் செயலியில் உள்ள தகவல்கள் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்றும்…

மேலும்...

டெல்லி கலவரம் – தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

புதுடெல்லி (20 ஜன 2022): வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 2020 கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முதல் தண்டனை அறிவிக்கப்பட்டது. தினேஷ் யாதவ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 73 வயது மூதாட்டியின் வீட்டைக் கொள்ளையடித்து பின்பு அந்த வீட்டை எரித்ததற்காகவும், கலவரத்துக்குத் தலைமை தாங்கியதற்காகவும் தினேஷ் யாதவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. கோகுல்புரியில் உள்ள பகீரதி விஹாரில் வசிக்கும் 73 வயதான மனோரி என்பவரின் வீடு தினேஷ் யாதவால் தீக்கிரையாக்கப்பட்டது….

மேலும்...