சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் தொடங்கும் சொகுசுக் கப்பல் பயணம்!

ஜித்தா (10 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் கப்பல் பயணம் மீண்டும் தொடங்குகிறது. சவூதி அரேபியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு பயணக் கப்பல் கோவிட் பரவல் காரணமாக ரத்து செய்யப்பாட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டு. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக திட்டத்தை இயக்கும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது ஒருவர் 2150 ரியால்களில் தொடங்கி பல்வேறு தொகைகளில் வசதிக்கேற்ப பேக்கேஜ்களை தேர்வு செய்யலாம். ஜித்தாவிலிருந்து செங்கடல் வழியாக புறப்படும் இந்த கப்பல்…

மேலும்...

கத்தாரில் மேலும் தளர்த்தப்படும் சில கோவிட் கட்டுப்பாடுகள்!

தோஹா (08 ஜூலை 2021): கத்தாரில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகளின் ஒரு பகுதியாக மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிதிருத்தும் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் தோஹா மெட்ரோ ஆகியவற்றிற்கு 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும். அதேபோல பொது இடங்களில் பதினைந்து பேர் வரை கூடலாம். தனியார் சுகாதார நிலையங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும்...

கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்திய பெண் மீட்பு!

தோஹா (08 ஜூலை 2021): சவூதி, கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர், சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த எலிசம்மா என்ற பெண் கத்தார் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். கத்தாருக்கு வந்தபின் எலிசம்மா அவரது ஸ்பான்சரால் சவூதி, கத்தார் எல்லையில் உள்ள சல்வா பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்க பணிக்கப் பட்டுள்ளார். சரியான உணவின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடந்த இரண்டரை வருடங்களாக இந்த கடும்…

மேலும்...

துபாய் ஜபல் அலி துறைமுக கப்பலில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து!

துபாய் (08 ஜுலை 2021): துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் புதன்கிழமை இரவு ஒரு கப்பலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் அரசு அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரல் மோனா அல் மர்ரி கூறுகையில், விபத்து ஏற்பட்ட கப்பலில் அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் . தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. என்றார். துபாயின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் மாலையில் துறைமுகத்திலிருந்து பயங்கர சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்,. இந்த…

மேலும்...

மிகக் குறைவான வாழ்க்கை செலவை உள்ளடக்கிய நகரம் குவைத்!

குவைத் (07 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் மிகக் குறைவான செலவு செய்யக்கூடிய நகரம் என்ற சிறப்பை குவைத் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நம்பியோ இன்டெக்ஸ் என்ற வலைத்தளம் இதுகுறித்த பட்டியல் ஒன்றை வெளியிடும். அது வெளியிட்டுள்ள பட்டியலில் வளைகுடாவில் அதிக வாழ்க்கைச் செலவு கொண்ட நகரங்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் தினசரி தேவைகள் மற்றும் உணவு, செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்…

மேலும்...

சவுதியில் இக்காமா காலாவதியானவர்கள் அபாரதமின்றி ஊர் செல்ல மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (06 ஜூலை 2021): சவுதி அரேபியாவில், இகாமா காலாவதியாகி புதுப்பிக்க முடியாமலும் எக்சிட்டில் ஊர் செல்ல முடியாமலும் இருப்பவர்கள் எந்தவித அபராதமும் இன்றி ஊர் செல்லலாம் என்ற விதிமுறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சவூதி ரேபியாவில் இக்காமா கலவாதியானர்வகள் அபராதம் எதுவும் இன்றி உடனடியாக ஊர் செல்லலாம் என்கிற விதிமுறையை இதுவரை யாரும் சரிவர பயன்படுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்களும், இந்திய தூதரக அதிகாரிகளும் கலவை அடைந்துள்ளனர். இந்த விதிமுறை திரும்பப்பெறப்பட்டால்…

மேலும்...

இந்தியர்கள் கத்தாருக்குச் செல்ல விசா வழங்கும் பணி துவக்கம்!

கத்தார் (ஜூலை 5): கொரோனா பரவல் காரணமாக, நெடுங்காலமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இந்தியர்களுக்கான விசாக்கள் வழங்கும் பணி, இன்று முதல் கத்தாரில் துவங்கியது. இதன்மூலம், கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரை கத்தாருக்கு வரவழைக்கும் வண்ணம் ‘ரெஸிடென்ஸ் விசாக்கள்’ இன்றுமுதல் வழங்கப்படும். Metrash2 எனப்படும் கத்தர் அரசின் ஆப் வழியே மிக எளிதாக இந்த விசா பெற எவரும் விண்ணப்பிக்கலாம். இச்செய்தி, இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.    

மேலும்...

கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம்!

துபாய் (04 ஜூலை 2021); உலகிலேயே அதிக சதவீதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இடம் பிடித்துள்ளது. ப்ளூம்பெர்க் தடுப்பூசி டிராக்கர் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி , வெளிநாட்டவர்கள் உட்பட 10 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், இரண்டு டோஸ் தடுப்பூசியை 72.1 சதவீத மக்களுக்கு விநியோகித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி கோவிட் விகிதம் . பிப்ரவரியில் இது 4,000 ஆக இருந்தது. மார்ச் முதல்…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

எக்ஸ்போ 2020 க்கு தயாராகும் துபாய்!

துபாய் (03 ஜுலை 2021): எக்ஸ்போ 2020 க்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது. துபாய் எஸ்போ 2020 வரும் அக்டோபர் 1 ஆம் தேதி (2021) முதல் நடைபெறவுள்ள நிலையில் அதன் முனேற்பாடுகளை அதன் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர். துபாயின் மகுட இளவரசரும் செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான ஏற்பாட்டுக் குழு எக்ஸ்போ 2021 முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தது. இந்த ஏற்பாடுகள் குறித்து ஷேக் ஹம்தான்…

மேலும்...