கொரோனா வைரஸுக்கு சவூதியில் 10 இந்தியர்கள் மரணம்!

ரியாத் (20 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சவூதி அரேபியாவில் 10 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக் கிழமை வரை 9362 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 97 பேர் பலியாகியுள்ளனர். 1398 பேர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள். இதில் நான்கு பேர் மதீனாவிலும், மூன்று பேர் மக்காவிலும், இருவர்…

மேலும்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!

ஜெரூசலம் (02 ஏப் 2020): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமி நெதன்யாகுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனை அடுத்து…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (01 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கத்தாரில் வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் தடையில்லாமல் வழங்கப்படும் என்று கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கத்தார் தொழில்துறை உயர் அதிகாரி முஹம்மது ஹசன் அல் உபைத் அலி தெரிவிக்கையில், “கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் தங்கியிருப்பவர்கள், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியம் மாதத்தின் முதல் வாரத்திலேயே…

மேலும்...

கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி!

தெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,594 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஈரானில் கொனா பாதிப்பால் இன்று ஒரே நாளில்…

மேலும்...

கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை!

துபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி, இந்தியா,…

மேலும்...

குவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு!

குவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில் பரவி வருகிறது. குவைத்தில் இதுவரை 148 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை இடப்பட்டுள்ளதாக குவைத் அரசின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல் முஜ்ராம் வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்….

மேலும்...

சவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்!

ரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு இதுவரை கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) அல் அரபியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் 8 பேர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலானோர் பல்வேறு நாடுகளிலிருந்தும் சமீபத்தில் பயணம் மேற்கொண்டவர்கள். இதற்கிடையே சமூக…

மேலும்...

கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி!

தெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் மீது,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்களுக்கு உடனடியாக தகவல் தரப்படவில்லை…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 1135 ஆக உயர்வு!

தெஹ்ரான் (18 மார்ச் 2020): சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 147 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்...

சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...