ஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (27 மே 2020): மீண்டும் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 14.2.2020 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த “2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” மற்றும் அதன் “மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்” எல்லாம் உருவிழந்து, “கொரோனா பேரிடரால்” – அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய…

மேலும்...

விமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து!

மதுரை (27 மே 2020): இரண்டு மாதங்களுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பயணிகள் விமானத்தில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களில் பயணிக்க பயணிகள் வராததால் 1 விமானம் மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன….

மேலும்...

தமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் உள்ள நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி வேகத்தில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத் தொடர்பு கியர் உற்பத்தி ஆலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும்...

பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால், சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள்களை திருத்தவும், மையங்களில் நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் திருத்துபவர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை…

மேலும்...

கொரோனா நோயாளி தற்கொலை – தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்த மேலும் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக…

மேலும்...

கொரோனா காலத்தில் தினமும் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வரும் காஜா பாய் டிபன் கடை!

சென்னை (26 மே 2020): கொரோனா காலத்தில் சென்னை திருவல்லிக்கேணி காஜாபாய் பிரியாணி கடையில் தினமும் 1000 ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர். இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை மிகவும் எளிமையாக தங்களின் வீடுகளிலேயே நேற்று கொண்டாடினார்கள். கொரானா வைரஸ் பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்து, பொது வழிபாட்டு தலங்கள் பிரார்த்தனைகள் ஆகியவற்றிற்கு தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மசூதிகளில் கூட்டம் ஏதும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கிறது காஜா பாய் டிபன் கடை….

மேலும்...

எந்த புதுமண தம்பதிக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது!

சேலம் (26 மே 2020): புதுமணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் திருமணம் முடிந்த உடனே தம்பதிகள் இருவரும் தனிமைப் படுத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த பெண்ணுக்கும், திருப்பூரில் வேலை பார்த்து வந்த பையனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், நேற்று முன் தினம் ( மே 24) நடக்க இருந்தது. இருவரும், கெங்கவல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா…

மேலும்...

ஆஸ்ரமத்தில் அதிர்ச்சி – 20 பேருக்கு கொரோனா!

சென்னை (26 மே 2020): நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆதரவற்றோர் ஆஸ்ரமத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை அசோக் நகரில் ஆதரவற்றோர் ஆஸ்ரமம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக…

மேலும்...

உற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!

நாகூர் (26 மே 2020): லாக்டவுனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். இவ்வருட ரம்ஜான் பண்டிகை உற்சாகம் இழந்ததாகவே காணப்பட்டது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை…

மேலும்...

குடியரசுத் தலைவர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற விசாரணை தேவை – பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (25 மே 2020): குடியரசுத் தலைவரை ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தது குறித்து உச்ச நீதிமன்ற விசாரணை நடத்தப்படுமா? என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலின் உள்ளே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நுழையவிடாத காரணத்தால் அவர் கோவி லுக்கு வெளியே உள்ள படியில் அமர்ந்து குடும்பத்துடன் வழிபாடு செய்தார். அப்போது இவ்விவகாரம் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தல்…

மேலும்...