க. அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பலனில்லை – ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு அளிக்கப்படும் தீவிர சிகிச்சையில் பலனில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரிக்க சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர…

மேலும்...

புற்றுநோய்க்கு உதவி கேட்ட பாஜக பிரமுகர் – உடனே உதவுவதாக அறிவித்த திமுக எம்பி!

சென்னை (06 மார்ச் 2020): தனது உறவினரின் புற்று நோய் சிகிச்சைக்கு உதவி கேட்ட பாஜக பிரமுகருக்கு திமுக எம்பி செந்தில்குமார் உதவி செய்ய முன்வந்துள்ளார். பாஜக பிரமுகரும், ட்விட்டரில் அதிமுக எம்பி செந்தில்குமாருடன் கருத்துப் போரில் ஈடுபடுபவருமான எல்.ஜி.சூர்யா என்பவர் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். அதில், என் நண்பரின் அம்மாவிற்கு முஸினஸ் கார்சினோ வகை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவரின் பெயர் பிரேமலதா. பிரேமலதா அம்மா தற்போது கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை…

மேலும்...

அதிமுக விழாவில் மத்திய அமைச்சருக்கு கிடைத்த அவமானம்!

விருதுநகர் (06 மார்ச் 2020): புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை அதிமுக பிரமுகர்கள் அவமானப் படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு தமிழக அமைச்சர்களும், சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனும் கலந்து கொண்டார். விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது அவரது…

மேலும்...

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று…

மேலும்...

அரசுப் பேருந்து திடீர் கட்டணக் குறைப்பு!

விழுப்புரம் (06 மார்ச் 2020): விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் புகா் சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச பயணக் கட்டணம் வியாழக்கிழமை முதல் குறைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் 8 கோட்டங்களாக செயல்பட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமாா் 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்துகளின் பயணக் கட்டணத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் உயா்த்தியது. இந்த நடவடிக்கை விமா்சனத்துக்குள்ளானபோதும், விலைவாசி உயா்வை கருத்தில்கொண்டு பேருந்துகளுக்கு…

மேலும்...

கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….

மேலும்...

கரூரில் கலகலப்பு – எடப்பாடியை வரவேற்ற திமுக -VIDEO

கரூர் (06 மார்ச் 2020): தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை கரூரில் வரவேற்க அதிமுக கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில் திமுக கொடியும் இடையே பறந்து கலகலப்பூட்டியது. தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கரூருக்கு வியாழன் அன்று வந்தார். கரூர் அடுத்த காந்திகிராமத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 ஆம் தேதி அன்று தமிழக…

மேலும்...

கொரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண் – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (05 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 044-29510400 044-29510500 94443 40496 87544 48477 மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் அரசு மருத்துவ குழு உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதித்து நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? என்று தீர்மானிப்பார்கள்.

மேலும்...

அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ போலீசில் புகார்!

கோவை (05 மார்ச் 2020): அவதூறு பரப்பி கலவரத்தை தூண்ட முயல்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்….

மேலும்...

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவை (05 மார்ச் 2020): கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இன்று (வியாழன்)காலை கணபதி வேதம்பாள் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து கைது…

மேலும்...