சிஏஏ குறித்து பேச்சுவார்த்தை – ரஜினி பதில்!

சென்னை (05 மார்ச் 2020): சிஏஏ விவகாரத்தில் பிரதமர் மற்றும் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்பினரிடம் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். பின்பு…

மேலும்...

கோவை இந்து முன்னணி செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

கோவை (05 மார்ச் 2020): கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவரும் அவருடைய நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். அப்போது ஆனந்த் கோவை ராமநாதபுரம் பகுதியை கடந்து…

மேலும்...

பாலியல் குற்றவாளியான பாஜக எம்.எல்.ஏ கொலை குற்றவாளி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி (04 மார்ச் 2020): உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்ததும் முன்னாள் பா.ஜ., தலைவர் குல்தீப்சிங் செங்கார் தான் என்று டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற 19 வயது இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அந்தப் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்த…

மேலும்...

டெல்லி கலவரத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்த முஸ்லிம்!

புதுடெல்லி (03 மார்ச் 2020): டெல்லி கலவரத்தில் வன்முறை கும்பலால் பாதிக்கப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளார் அய்யூப் அஹ்மது என்ற முஸ்லிம். டெல்லியில் கடந்த வாரம் சிஏஏ எதிர்ப்பு போராட்டக் காரர்களிடம், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற பெயரில் புகுந்த வன்முறை கும்பல், நடத்திய இனப்படுகொலையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர், 200 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வன்முறை நடந்தபோது, ஒரு வீட்டுக்குள் நுழைந்த கும்பல் 45 வயது மதிக்கத்தக்க…

மேலும்...

மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ளவர்களுக்கு மம்தா மகிழ்ச்சியான தகவல்!

கொல்கத்தா (03 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ள அனைவரும் இந்தியர்கள்தான் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்தமான சி.ஏ.ஏ.வை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் குடியேறியுள்ள அனைவருமே இந்திய நாட்டின் குடிமக்களே. அவர்களுக்கு இந்திய குடியுரிமை இருக்கிறது. அவர்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்…

மேலும்...

பாலியல் வழக்கில் இந்து மகா சபா தலைவர் கைது!

சென்னை (03 மார்ச் 2020): பெண் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் கைது செய்யப்பட்டார். ‘அகில இந்திய இந்து மகா சபா’ என்ற அமைப்பின் தலைவராக ஸ்ரீகண்டன் செயல்படுகிறார். இந்த அமைப்பின் அலுவலகம் சென்னை கீழ்ப்பாக்கம், ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த அமைப்பின் பெண் நிர்வாகி நிரஞ்சனி, ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்தார். நிரஞ்சனி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் ஸ்ரீகண்டன்…

மேலும்...

மாநில அளவிலான கபடி போட்டி – வீடியோ!

கரூர் (03 மார்ச் 2020): கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் முதல் பரிசை கரூர் அணி தட்டிச் சென்றது. வெற்றி லெற்ற அணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து பரிசுகளை வழங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு நகர அதிமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நேற்று மாலையில் துவங்கியது. இந்த போட்டிகளில் சென்னை, கரூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து…

மேலும்...

தமிழக போராட்டம் எதிரொலி- சட்டசபையில் தீர்மானத்திற்கு வாய்ப்பு- தமிழக அமைச்சர்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களின் எதிரொலியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும் தங்கமணியும் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியனவற்றை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. எனினும் முதல்வர் எடப்பாடியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் திருச்சியில்…

மேலும்...

கோவையில் பாஜக இந்து முன்னணியினர் இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

கோவை (02 மார்ச் 2020): கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டன. அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோர் கார் ஓட்டி வந்த டிரைவருக்கு ஆதரவாகப்…

மேலும்...

ரஜினியும் கமலும் இணைய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

புதுடெல்லி (02 மார்ச் 2020): நடிகர் ரஜினியும் கமலும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16…

மேலும்...