சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்கில் நடைபெற்ற நெகிழ வைக்கும் நிகழ்ச்சி!

சென்னை (26 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை (ஷஹீன் பாக்) போராட்டக் களத்தில் இந்து பெண் ஒருவருக்கு முஸ்லிம் பெண்கள் சீமந்தம் நடத்தி அழகு பார்த்தனர். குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கோரியும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற கோரியும் சென்னை வண்ணாரப்பேடையில் பெண்கள் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டு…

மேலும்...

அதையே ஏன் திரும்ப திரும்ப கேட்கிறீங்க? – பதிலளிக்க மறுத்த ரஜினி!

சென்னை (26 பிப் 2020): முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் முன்னே நிற்பேன் என்றீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ரஜினி பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது- டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். டெல்லி வன்முறையை இரும்புக்…

மேலும்...

தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் – முதல்வர் எடப்பாடி பதில்!

திருச்சி (26 பிப் 2020): தமிழகத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திருச்சியில் முக்கொப்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் புதிய அணையின் கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், , “கதவணை கட்டுமான பணியில் 35 % பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மொத்தமுள்ள 484 பைல்களில் ( தூண்களில் ) தற்போது வரை…

மேலும்...

டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி படுகொலை!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறையில் புலணாய்வு அதிகாரி அங்கிட் ஷர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் அங்கிட் சர்மா. பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இன்று காலை அவரது உடலை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்…

மேலும்...

தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணம் – மோடிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (26 பிப் 2020): தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால், பல…

மேலும்...

மீண்டும் ஒரு குஜராத் – ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (25 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிவரும் இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா குண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- “சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில், ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களில் அவ்வப்போது சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் அமைதிவழி…

மேலும்...

டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் – ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து!

புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையும் உயிரிழப்புகளும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ;- “ வன்முறைகளையும் உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டுமெனில் குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மக்களிடையே பிளவை உருவாக்கும் என ஏற்கனவே எச்சரித்தோம். குறுகிய பார்வை கொண்டோரை ஆட்சியில் அமர வைத்ததற்கான விலையை மக்கள் அளித்து வருகின்றனர்….

மேலும்...

தென்னிந்திய சாதனையாளர் விருது பெற்றார் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ!

சென்னை (24 பிப் 2020): பரங்கிப்பேட்டை கலீல் பாகவீக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னை கமலாலயம் அறக்கட்டளை, சென்னை கலாமின் கனவு அறக்கட்டளை மற்றும் கோவை உயிர் தளிர் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து “தென்னிந்திய சாதனையாளர் விருது – 2019” வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) காலை சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு…

மேலும்...

அதிமுகவில் அடுத்த விக்கெட் – திமுகவின் பந்து வீச்சில் கிளீன் போல்ட்!

சென்னை (24 பிப் 2020): அதிமுகவில் இருந்து விலகிய ராஜ கண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அறிவித்தபடி மதுரையில் ஸ்டாலின் தலைமையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். ராஜ கண்ணப்பட்ன் திமுகவில் இணைந்தது குறித்து செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது, ராஜ கண்ணப்பன் தமிழகத்தில் செல்லாத நோட்டாகிவிட்டார். அவர் முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில்…

மேலும்...

கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த நான்கு வயது குழந்தை படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை (24 பிப் 2020): நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி… நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி பிரகாஷ் – தீபா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான். எல்.பி.ஜி டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றி…

மேலும்...