இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல – சென்னை ஷஹீன் பாக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்!

சென்னை (17 பிப் 2020): நாட்டில் நடக்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல என்று மகாத்மா காந்தியின் பேரன் மகன் துசார் காந்தி தெரிவித்தார். சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக் களத்திற்கு வருகை புரிந்திருந்த துசார் காந்தி, போராட்டம் செய்யும் மக்களிடையே பேசும்போது, குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் ஒற்றுமையை எவ்வளவு நுட்பமாகப் பிரிக்கின்றனர் என்பதை பாருங்கள்? நாட்டில் நடந்து வரும் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைக்…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் இயக்குநர் ராஜ்கபூரின் மகன் மெக்காவில் மரணம்!

மெக்கா (17 பிப் 2020): பிரபல நடிகர் இயக்குநர் மகன் ஷாருக் கபூர் (23) மெக்காவில் உடல் நலக்குறைவால் மரணம். நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2,…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்கில் (வண்ணாரப்பேட்டை) நடந்த திருமணம் – வீடியோ

சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமண நிகழ்வில் மணமக்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். கையில் சி.ஏ.ஏவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அனைவரது…

மேலும்...

சிஏஏவை எதிர்த்து சட்டமன்றம் முற்றுகை – தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

சென்னை (17 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராகவும் பிப்.19ஆம் தேதி…

மேலும்...

அன்று நமக்காக நின்றார்கள், இன்று அவர்களுக்காக நிற்போம்: சென்னை ஷஹீன்பாக்கில் இந்துக்கள்!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் காரர்களுக்கு உணவுகள் வழங்கி உதவி வருகின்றனர் அப்பகுதி இந்துக்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை ஷஹீன் பாக்காக மாற்றி பொதுமக்கள் 4வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் வண்ணாரப்பேட்டை பகுதியில்…

மேலும்...

உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுவதா? – முதல்வருக்கு எஸ்டிபிஐ கண்டனம்!

சென்னை (17 பிப் 2020): வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்த முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் நடந்த திருமணம்!

சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சென்னையில் வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்காக மாறியுள்ளது. இங்கு அனைவரும் வியக்கும் வகையில் ஒரு திருமணம் நடைபெற்றது. நிக்காஹ் முடிந்த நிலையில் மணமக்கள் கையில் இந்திய அரசியல் சாசன சட்டத்தை வைத்துக்கொண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் வெளிநடப்பு!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தனர். 2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் வண்ணாரப்பேட்டையில்…

மேலும்...

சென்னை ஷஹீன் பாக்: தொடரும் நான்காவது நாள் போராட்டம் – வீடியோ!

சென்னை (17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து சென்னையும் டெல்லியை போன்று ஷஹீன் பாக்காக மாறியது. இதனை தொடர்ந்து…

மேலும்...

நான் பர்தா அணிவதை பெருமையாக உணர்கிறேன் – தஸ்லீமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மகள் பதிலடி!

சென்னை (16 பிப் 2020): நான் என்ன உடை அணிய வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு என்ன கவலை? நாட்டில் பல விசயங்கள் நடக்கின்றன, அதில் கவனம் செலுத்துங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சர்ச்சையான எழுத்துகள் மூலம் பெயர் பெற்றவர் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின். இவர் தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார். இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா பர்தா அணிவது குறித்து விமர்சித்து…

மேலும்...