தாராபுரம் அருகே பெண் காவலர் தற்கொலை!

திருப்பூர் (02 பிப் 2020): திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் வள்ளியம்மாள் (31), இவரது கணவர் ராமசாமி (35). இந்த தம்பதிக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வள்ளியம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது…

மேலும்...

குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் – ஸ்டலின்!

சென்னை (02 பிப் 2020): குடியுரிமை சட்டம் நிறைவேற அதிமுகவும் பாமகவுமே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிக்காய் குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றுக்கு எதிரான ஒருகோடி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

மேலும்...

இந்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை (02 பிப் 2020): “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெஞ்சு முழுவதும் வன்மம் குடியிருக்கிறது!” என்று திமுக தலைவர ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது! தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அமைப்புகள் சில செயல்படுகின்றன!” என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்…

மேலும்...

மத்திய பட்ஜெட் திருப்தியில்லை – ஸ்டாலின் அறிக்கை!

மத்திய அரசின் பட்ஜெட்டில் திருப்தியில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது….

மேலும்...

மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடியின் கருத்து!

சென்னை (01 பிப் 2020): மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும்…

மேலும்...

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்த அழகிரி!

சென்னை (01 ஜன 2020): ரஜினி பெரியார் விவகாரம் குறித்த விவகரத்தில் ரஜினிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுத்த திக பிரமுகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அதேபோல, தர்பார் தோல்வி குறித்தும், விநியோகஸ்தர்கள் முறையீடு குறித்தும் ” ஆபீஸ் வரவும்” என்ற சிவாஜி பட வசனத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

மேலும்...

எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

ராமநாதபுரம் (01 பிப் 2020): எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். களியக்காவிளை செக்போஸ்ட்டில் ஸ்பெஷல் எஸ்ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்துல் ஷமிம், தவ்பீக் ஆகியோர் முதலில் கைதானவர்கள்.. உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் இவர்கள் கைதானார்கள். இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.. இந்த விவகாரத்தில் தமிழக கியூ பிரிவு போலீசார் சிறப்பான விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சாவூர் (31 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை தமிழ் ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூறியபடி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடைபெறும் என உத்தரவிடப்பட்டது. குடமுழுக்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிலிருந்து வந்த தமிழக வாலிபர் கூறுவது இதுதான்!

சென்னை (31 ஜன 2020): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம்…

மேலும்...

சீனாவிலிருந்து வந்த தமிழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு?

திருவண்ணாமலை (31 ஜன 2020): சீனாவிலிருந்து தமிழகம் வந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவா்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை…

மேலும்...