மன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி திட்டவட்டம்!

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ராஜினி வீடு முற்றுகை இடப்படும் என பெரியார் அமைப்புகள் தெரிவித்துள்ளன. திக தலைவர் கி.வீரமணி ரஜினி தக்க…

மேலும்...

ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி!

கிருஷ்ணகிரி (21 ஜன 2020): கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடப்பாரை மற்றும் எரிவாயு வெல்டர் மூலம் வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே செல்ல கொள்ளையர்கள் முயன்றுள்ளனர். அப்போது, வங்கியில் இருந்த காலண்டர் மற்றும் ஒயர்கள் தீப்பிடித்ததால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்த அஞ்செட்டி காவல் ஆய்வாளர் ரவிக்குமார், நிகழ்விடத்துக்கு…

மேலும்...

ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் – கி.வீரமணி கண்டனம்!

தூத்துக்குடி (20 ஜன 2020): பெரியார் குறித்து அவதூறு தகவல் வெளியிட்டதற்காக ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி. ரஜினிகாந்த் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதும், ‘’ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார்…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கிறது – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (20 ஜன 2020): ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது…

மேலும்...

வங்கியில் உள்ள முழு பணத்தையும் பொதுமக்கள் திரும்பப் பெறுவதால் பரபரப்பு!

காயல்பட்டினம் (20 ஜன 2020): காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வங்கியில் உள்ள பணத்தை திரும்பப் பெற்று வங்கிக் கணக்கை பொதுமக்கள் முடித்துக் கொள்வதாக தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வங்கியின் பேங்க்…

மேலும்...

மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால்…

மேலும்...

பத்த வச்சுட்டியே பரட்ட – ரஜினியைக் கிண்டல் செய்த அமைச்சர்!

சென்னை (20 ஜன 2020): “பரட்டை பற்ற வைத்தது தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது!” என்று நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் பேசியதற்கு “ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துக்ளக் விழாவில்…

மேலும்...

காதலனுடன் இருந்தபோது இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!

வேலூர் (20 ஜன 2020): வேலூரில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்த 24 வயது பெண், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருகிறாா். அவர் காதலித்து வந்த இளைஞருடன் அந்தப் பெண், சனிக்கிழமை இரவு சாரதி மாளிகை எதிரே உள்ள வேலூா் கோட்டை பூங்காவுக்கு வந்துள்ளாா். இருவரும் இரவு 9.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3…

மேலும்...

தஞ்சையில் பல லட்சம் மதிப்புள்ள கோவில் சிலை திருட்டு!

தஞ்சாவூர் (20 ஜன 2020): தஞ்சை கரந்தையில் பழமை வாய்ந்த கோவில் சிலை திருடப்பட்டுள்ளது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (19ம் தேதி) காலை பின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கோயிலில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர ஜினவாணி…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (20 ஜன 2020): தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலைவும். கடந்த 24 மணிநேரத்தில் திருவாரூர் மாவட்டம், பாண்டவையாறு, நீடாமங்கலம் தலா…

மேலும்...