மன்னிப்பு அல்லது பதவி நீக்கம் – அடம்பிடிக்கும் திமுக!

சென்னை (17 ஜன 2020): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைமை கோரியுள்ளதாம். திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை…

மேலும்...

எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது உபா வழக்கு!

காளியக்காவிளை (17 ஜன 2020): எஸ் ஐ வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள தவுபிக், சமீம் ஆகியோர் மீது உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவியாளா் வில்சனை கடந்த 8-ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் இரு நபா்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்,…

மேலும்...

மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த அதிர்ச்சிகரமான பரிசு – வீடியோ!

மணமக்களுக்கு நண்பர்கள் இணைந்து புது விதமாக யோசித்து பரிசு வழங்கியுள்ளனர். இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில் மணமக்கள் இந்த பரிசை பார்த்து அதிர்ச்சி அடைந்து போயிருப்பார்கள். இபோதெல்லாம் மணமக்களின் நண்பர்களின் லொல்லு அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன.

மேலும்...

ஸ்டாலின் முதல்வராக முடியாது – பகீர் கிளப்பும் காங்கிரஸ் எம்பி!

சென்னை (17 ஜன 2020): திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவிலேயே ஆட்கள் உள்ளனர். என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் இடப பங்கீட்டில் எற்பட்ட கசப்பின் காரணமாக, ‘கூட்டணி தர்மத்தை மீறி திமுக செயல்படுவதாக’ மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சமயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸ், திமுகவைவிட்டு விலகுவதால் என்ன…

மேலும்...

ரவுடிகளின் கூடாரமாகும் தஞ்சாவூர் – பீதியில் மக்கள்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூரில் இருவர் கொல்லப் பட்ட நிலையில் கொலையாளிகள் இன்னும் இதுபோல சில சம்பவங்களைச் செய்தால்தான் தஞ்சாவூரில் நம்பர் ஒன்னாக இருப்போம்’ என கத்திக்கொண்டே சென்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்கு வாசல். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர், சக்திவேல். கூலி வேலை செய்துவந்தார். இந்த நிலையில், சக்திவேலும் அவரது நண்பர் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த செபஸ்டியன் மற்றும்…

மேலும்...

புலி வாலை பிடித்த கதையானது தமிழக காங்கிரஸின் நிலை!

சென்னை (16 ஜன 2020): தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் தற்போது தமிழக காங்கிரஸுக்கு புலிவாலை பிடித்த கதையாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், உள்ளாட்சித் தேர்தலில் நடத்தப்பட்ட விதத்திற்காக கொதித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. 27 மாவட்டங்களில் நட்ந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் கே.எஸ்.அழகிரி, “உள்ளாட்சித் தேர்தலுக்கு திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில்…

மேலும்...

தமிழர்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்து – வீடியோ!

கனடா (16 ஜன 2020): பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தைத்திருநாளான முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.மேலும் கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின்…

மேலும்...

தஞ்சை அருகே கார் மோதி நான்கு பேர் பலி – பொங்கல் தினத்தில் சோகம்!

தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூர் அருகே கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் பகுதியில் ஜெபக்கூடம் உள்ளது. இதில், பொங்கல் திருநாளையொட்டி புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வல்லம்புதூரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் – திருச்சி முதன்மை சாலையிலுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில்…

மேலும்...

சோவே பைத்தியம் என்று சொல்லிட்டார் (வீடியோ) – ரஜினியை கலாய்த்த திமுக எம்.பி!

சென்னை (16 ஜன 2020): துக்ளக் படித்தால் பைத்தியம் பிடிக்கும் என்று சோவே சொல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திமுக எம் பி செந்தில்குமார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய ரஜினிகாந்த் “முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று…

மேலும்...

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

காளியகாவிளை (16 ஜன 2020): காளியக்காவிளை எஸ்.ஐ வில்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் இன்று (வியாழன்) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக…

மேலும்...