மதங்களை கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்த தமுமுக!

சென்னை (28 ஜூன் 2021); மதங்களைக் கடந்து கொரோனாவால் உயிரிழந்த நூற்றுக் கணக்கான உடல்களை அடக்கம் செய்து பலரையும் நெகிழ வைத்துள்ளனர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) தொண்டர்கள். கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என விஸ்வரூபம் எடுத்து உலகையே ஆட்டிப் படைத்து வரும் நிலையில்,  இந்தியா மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மீதுள்ள அச்சத்தின் காரணமாக  உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இறந்தோரின்…

மேலும்...

மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என உத்தரவிட்ட வட்டாட்சியர் – விசாரணையில் இறங்கிய அமைச்சர்!

திருப்பூர் (மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என வட்டாட்சியர் எச்சரித்தது குறித்து விசாரணை நடத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாட்டு இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை அம்மாவட்ட வட்டாட்சியர் அழைத்து பேசியுள்ளார். துளுக்கமுதுர் அருகே உள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்தி வரும் வேலுசாமி என்பவரை அவிநாசி வட்டாட்சியர் சுப்ரமணி, இனி மாட்டு இறைச்சி விற்க கூடாது என கூறி எச்சரித்து உள்ளார். இதைக்…

மேலும்...

தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் கடும் எச்சரிக்கை!

சென்னை (28 ஜூன் 2021): முழுக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சீருடை, பேருந்து உட்பட இருந்து இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது. மேலும், கட்டணம்…

மேலும்...

டிவிட்டரில் கோரிக்கை வைத்த பெண் – செயல்படுத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

சென்னை (27 ஜூன் 2021); டிவிட்டரில் ஒரு பெண் வைத்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் ஜோசபின் ரம்யா என்னும் இளம்பெண் அவரது ட்விட்டர் பதிவில் தனது தோழியின் சகோதரி உயிரிழந்து விட்டதால் உடனடியாக அவரது பெற்றோர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டும் என்று கூறி அமைச்சர் செஞ்சி மஸ்தானை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்தப்…

மேலும்...

சதிகாரர்களுக்கு இடமில்லை – கமல்!

சென்னை (27 ஜூன் 2021): மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, புதிய நிர்வாகிகளை அதன் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே “மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, தேவையான மாற்றங்களைச் செய்வேன்!” என கடந்த மே 24ஆம் தேதி வீடியோ வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (26.06.2021) இணையவழி கலந்துரையாடலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ”நம்மைப் படகாக்கி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள விரும்பும் சதிகாரர்களுக்கு…

மேலும்...

தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது திமுக – எச்.ராஜா!

காரைக்குடி (27 ஜூன் 2021): ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகத்த்திற்கு தலைகுனிவு என்று பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எச் .ராஜா, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துள்ளன. எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில், ‘ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்று இல்லாதது தமிழகமே தலைநிமிர்ந்தது,’ என்றார். இதுபோன்ற தலைகுனிவு வேறில்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளை தான் ஜெய்ஹிந்த் என்று முன்மொழிந்தார்….

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை…

மேலும்...

கொரோனா பரிசோதனை – மர்ம மாத்திரை: மேலும் ஒருவர் உயிரிழப்பு!

ஈரோடு (27 ஜூன் 2021): ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பெருமாள்மலை சேனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர். இவரது மனைவி மல்லிகா(55). மகள் தீபா(30). இவர்களது தோட்டத்தில் பணிபுரிந்தவர் குப்பம்மாள் (60). இந்த நிலையில், நேறறு காலை கருப்பண கவுண்டரின் வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கொரோனா…

மேலும்...

எச் ராஜா மீது நடவடிக்கை? – பாஜக தலைவர் எல்.முருகன் பதில்!

சென்னை (26 ஜூன் 2021): கட்சி பணத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் வீடு கட்டி வருவதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. குறிப்பாக முன்னாள் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தோல்வி அடைந்தற்கு பாஜக நிர்வாகிகள்தான் கரணம் என்று சரமாரியாக குற்றம் சாட்டினார். ஆனால் எச். ராஜாவின் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில்…

மேலும்...

இதை செய்தால் ரூ 3 கோடி பரிசு – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீர‌ர்களுக்கு அரசு சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...