குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா – அதிரும் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் (22 ஜூன் 2021): காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்கும் ஒரு வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 258 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதா. அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா முதல் அலையில் 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு…

மேலும்...

தமிழ் நாட்டில் தொடர் மின்வெட்டு – அமைச்சர் செந்தில் பாலாஜி செய்வது இதுதான்!

சென்னை (22 ஜூன் 2021): திமுக அரியணையில் அமர்ந்த ஒரு வாரத்திலேயே மின்வெட்டு புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றையும் ஓரளவுக்கு மேனேஜ் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மின்வெட்டு பிரச்னை பெரிய தலைவலியாக உள்ளது. இச்சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர். மேலும் குறைகளையும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்தத் தீர்மானத்தின் போது பேசிய…

மேலும்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி – திமுக பங்கேற்பதாக தகவல்!

புதுடெல்லி (22 ஜூன் 2021): வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 15 கட்சிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இதில் திமுக பங்கேற்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் இருமுறை சந்தித்து விதித்துள்ளனர். இதில் நேற்றைய சந்திப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியை பிரதமர்…

மேலும்...

சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி!

சென்னை (22 ஜூன் 2021): 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். என்று தெரிவித்தார். மேலும் ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மேலும்...

நீட் தேர்வின் கொடுமை – அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்!

சென்னை (21 ஜூன் 2021): நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் மெயில் அனுப்பலாம் என அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை சண்முகம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : வீட்டின் வறுமையை தாண்டி அனிதா 12ம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலை சிறந்த 2 மருத்துவ கல்லூரிகளில் பயில்வதற்கு போதுமானது . ஆனால் நீட்…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவில்லாத தமிழக அரசு!

சென்னை (20 ஜூன் 2021): நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் , வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார். எனவே தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகத் தான் வேண்டும் எனவும் நாளைய தினமே…

மேலும்...

பாஜக அலுவலகம் சூறை – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

புதுச்சேரி (20 ஜூன் 2021): புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் நிறைவடைந்து விட்டன. இன்னமும் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை. என்ஆர் காங்கிரஸ் 3 அமைச்சர் பதவிகளையும் துணை சபாநாயகர் பதவியையும் பெற்றுக்கொண்டது. பாஜகவிற்கு 2 அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். தற்போது 2 அமைச்சர் பதவிகளுக்குப் போட்டோபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் குமாரும் சாய் சரவணக்குமாரும் தங்களுக்குத்…

மேலும்...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...

ஆர்எஸ்எஸ் குறித்து சொன்னது என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்!

சென்னை (20 ஜூன் 2021:ஆர்.எஸ்.எஸ். குறித்து கூறியது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

நுரையீரல் புற்றுநோய் மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்!

துபாய் (20 ஜூன் 2021): நுரையீரல் புற்றுநோய்க்கான புதிய மருந்தை ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரித்துள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு புதிதாக உருவாக்கப்பட்ட லுமக்ராஸ் என்ற மருந்துக்கு ஐக்கிய அரபு அமீரக சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு அமெரிக்காக. இரண்டாவது நாடு ஐக்கிய அரபு அமீரகம். இந்த வாய்வழியாக செலுத்தும் மருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உட்பட்ட வயதுவந்த நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக, கோவிட்டுக்கு எதிரான உலகின் முதல் மருந்தான சோட்ரோவிமாப்…

மேலும்...