ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் நூலிழையில் உயிர் தப்பினார்!

Share this News:

சென்னை (06 மார்ச் 2023): ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன்.

தந்தையின் இசையிலும் யுவன் இசையிலும் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் முன்னதாக தனது பாடல் ஒன்றுக்கான ஷூட்டிங் தளத்தில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் தான் நூலிழையில் தப்பியதாக அமீன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில் ”இன்று நான் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோrருக்கும் குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி. மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன்.

கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, ​​​​பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில அங்குலங்கள்… சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை” என அமீன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அமீனின் இந்தப் பதிவில் அவரது ரசிகர்கள் அமீனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் முன்னதாக பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து நேர்ந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *