கிராமத்தில் நுழைந்த போலீஸ் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வீடியோ!

Share this News:

ஷாம்லி (31 மே 2020): உத்திர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் கிராமத்தில் நுழைந்த போலீஸார் பெண்கள் உட்பட பலர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் தப்ரானா கிராமத்தில் மாட்டை கொலை செய்த வழக்கில் அப்சல் என்பவரை கைது செய்யச் சென்ற போலீசாருக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே கிராம மக்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் கிராம மக்கள் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் உள் நுழைந்தனர் என்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “போலீசார் பெண்களை கூட விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்தினர். வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். வீட்டில் தேவைக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர் ” என்றார்.

தப்ரானா கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் அக்ரம் சவுத்ரி தெரிவிக்கையில்,” அப்சல் குற்றவாளி அல்ல என்கிறபோதிலும் அப்சலை கைது செய்வதில் போலீசார் மும்முரம் காட்டினர். ” என்றார்.

பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜாவித் தெரிவிக்கையில், “ஷாம்லி கிராமத்தின் மூத்தவர் அன்வர் அப்சலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வருகிறோம், என்று போலீசில் தெரிவித்திருந்தார் அதன்படி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல தயாராகவே இருந்தார். ஆனால் போலீசார் அதனை கேட்கவில்லை. அப்சல் போலீஸ் நிலையத்தை அடையும் முன்பே, அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் 15 வாகனங்களை கிராமத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர்.” என்றார்.

உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தும் தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது.


Share this News: