திறமைக்கு பரிசு – மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த இன்ப அதிர்ச்சி!

Share this News:

மதுரை (31 மே 2020): ஃபேஸ்புக்கில் உள்ள குறையை கண்டுபிடித்து தெரிவித்த மதுரை மாணவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 1000 டாலர் பரிசு வழங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு போன் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலகட்டத்தில் அதில் சில அசவுகரியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது. தகவல் திருட்டு, ஊடுருவல் போன்றவை ஆண்ட்ராய்டு போன்களில் அதிகரித்துவிட்டன.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் உள்ள ரைட்ஸ் மேனேஜரில் உள்ள குறையை கண்டுபிடித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார் மதுரை மாணவர் கிஷோர்.

இவரை பாராட்டிய ஃபேஸ்புக் நிறுவனம் அவருக்கு 1000 டாலர் பரிசாகவும் வழங்கியுள்ளது. மேலும் இதனை அறிந்த மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாணவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.


Share this News: