தோஹா (13 டிச 2022): மொராக்கோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி 2022 FIFA உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியை விளையாடத் தயாராக உள்ளது.
இதுவரை எந்த ஆப்பிரிக்க நாடும் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு கூட எட்டியதில்லை. மொராக்கோ அணி விளையாடும் ஆறாவது உலகக் கோப்பை இதுவாகும்.
2018-ல் அந்த அணி 27-வது இடத்தில் இருந்தது.. அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வதில் பல வீரர்கள் பங்களித்துள்ளனர். ஆனால் மிக முக்கியமான பங்களிப்பு 29 வயதான ஹக்கீம் ஜியேச்.
இவர் ஐரோப்பாவின் முன்னணி கிளப்பான செல்சிக்காக விளையாடுகிறார். ரசிகர்கள் அவருக்கு ‘விசார்ட்’ என்று பெயர் வைத்துள்ளனர், அதாவது மந்திரவாதி.
மிட்ஃபீல்டர் ஹக்கிம் ஜியேச்சின் வாழ்க்கை கடந்த 12 மாதங்களில் அதன் ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்தது. 29 வயதான அவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் ஓய்வு பெற்றார்.
ஆனால் உலகக் கோப்பை போட்டிக்காக மொராக்கோ தரப்பில் ஹக்கீம் ஜியேச் மீண்டும் விளையாட முன்வந்தார், அணி மேலாளரின் கோரிக்கையை அவர் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார்.
செல்சியாவின் இந்த சீசனில், அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருந்தார். ஆனால் உலகக் கோப்பையில் கதை மாறியது. பெல்ஜியத்திற்கு எதிராக மொராக்கோ தனது முதல் வெற்றியைப் பெற்றது மற்றும் போட்டியின் நாயகனாக தெரிவானார்.
கனடாவுக்கு எதிராக ஹக்கீம் நான்காவது நிமிடத்தில் மொராக்கோவுகாக கோல் போட்டு அசத்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்பெயினுக்கு எதிரான பெனால்டி ஷூட்-அவுட்டிலும் ஹக்கிம் கோல் அடித்தார்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் அணியின் துணைத் தலைவராகவும் ஹக்கீம் கீச் உள்ளார்.