மும்பை (24 செப் 2020): ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் உயிரிழந்தார்.
ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்தி ஓட்டலில் தங்கி இருந்தார்.அங்கு அவர் மாரடைப்பால் காலமானார்.
ஜோன்ஸ் 1984 மற்றும் 1994 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.