இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு!

Share this News:

கொல்கத்தா (03 ஜன 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கங்குலி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாரடைப்பு காரணமாக கங்குலி மயங்கி விழுந்தது தெரிய வந்தது.

ரத்தக் குழாயில் 3 இடங்களில் உள்ள அடைப்பு காரணமாக ஏற்பட்ட லேசான மாரடைப்பு என்பதால் பிரச்னையில்லை என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரோஜ் மண்டல் தலைமையிலான 3 டாக்டர்கள் குழுவினர், ரத்தக் குழாய் அடைப்புகளை போக்கும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளித்தனர். ஒரு அடைப்பை நீக்குவதற்காக ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. நிலைமையை பொறுத்து மேற்கொண்டு ஸ்டென்ட் பொருத்துவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போது கங்குலியின் உடல்நிலை சீராக இருந்தாலும், மேலும் சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘கங்குலி விரைவில் குணமடைய வேண்டுவதாக’ மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தாங்கர், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட ஏராளமானவர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *