கேமராவில் சிக்கிய பெண் காவல் அதிகாரிகள் – வைரல் புகைப்படம்!

மும்பை (11 ஏப் 2023): விதிமுறைகளை மீறி வாகனத்தில் பயணம் செய்த இரு பெண் காவல் அதிகாரிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் செல்வதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார், இந்தப் புகைப் படத்தை ட்விட்டரில் சமூக ஊடகப் பயனர் ராகுல் பர்மன் என்பவர் பகிர்ந்துள்ளார். விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால், சட்டத்தைக் காப்பவர்களே விதிகளை மீறினால் என்ன செய்வது?

மேலும்...

ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான…

மேலும்...

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிய போலீஸ்!

கான்பூர் (09 அக் 2022): உ.பி.,யில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நபரின் மொபைல் போனை, போலீஸ்காரர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மகாராஜ்பூர் காவலரான பிரஜேஷ் சிங், சனிக்கிழமை இரவு கான்பூரின் சத்மாரா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரின் அருகில் மொபைல் போனை பார்த்த பின்னர் போனை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் எல்லாவற்றையும் மேலே சிசிடிவியில் பதிவானதை அந்த போலீஸ் அறியவில்லை. இந்த…

மேலும்...

டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல்!

புதுடெல்லி (19 ஏப் 2022): விஎச்பி, பஜ்ரங்தள் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்று டெல்லி காவல்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல் விடுத்துள்ளது. ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை அனுமதியின்றி நடத்தியதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விஎச்பி தலைவர் பிரேம் சர்மாவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இதனை காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) உஷா ரங்னானி பிடிஐயிடம் தெரிவித்தார். “விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் செயற்பாட்டாளர்கள் மீது எப்ஐஆர்…

மேலும்...

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது ஏன்? – காவல்துறை பரபரப்பு விளக்கம்!

சென்னை (10 பிப் 2022): சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ளது பாஜக தலைமை அலுவலகம். நேற்றிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியுள்ளனர். நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் நேரிடவில்லை. காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது…

மேலும்...

ஆறடி இடைவெளி அவசியம் – காதலர் தினத்தில் போலீஸ் அதிரடி!

மும்பை (14 பிப் 2021): கோவிட் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறடி இடைவெளியுடன் காதலர் தினம் கொண்டாட மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “தூரம் அன்பை வலிமையாக்குகிறது, உங்கள் காதல் முகமூடி மற்றும் ஆறு அடி தூரம் இதுவே எங்களுக்கு தேவை ” என்று மும்பை காவல்துறை ட்விட்டரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. .

மேலும்...

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர்,…

மேலும்...

கிராமத்தில் நுழைந்த போலீஸ் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வீடியோ!

ஷாம்லி (31 மே 2020): உத்திர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் கிராமத்தில் நுழைந்த போலீஸார் பெண்கள் உட்பட பலர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் தப்ரானா கிராமத்தில் மாட்டை கொலை செய்த வழக்கில் அப்சல் என்பவரை கைது செய்யச் சென்ற போலீசாருக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே கிராம மக்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே கிராம மக்கள்…

மேலும்...

நீ முஸ்லிம் என்று நினைத்து அடித்தோம் – கா(வி)வல்துறையின் மத துவேஷ பதில்!

போபால் (20 மே 2020): காவல்துறையில் ஊடுருவியுள்ள காவிகளை அடையாளம் காட்டியுள்ளது இன்னொரு சம்பவம். மத்திய பிரதேசத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தீபக் பந்துலே என்ற வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ள போலீசார், “உங்களை முஸ்லிம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினோம்” என்று மத துவேஷத்துடன் காரணம் கூறியுள்ளது. இதுகுறித்து கூறிய தீபக் பந்துலே கூறியிருப்பதாவது: “நான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன்….

மேலும்...

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் – பினராயி விஜயன் அதிரடி!

திருவனந்தபுரம் (18 மே 2020): கொரோனா நெருக்‍கடி இடையே தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்‍கு ஓய்வளிக்‍கும் வகையில், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம் ஓய்வெடுத்துக்‍கொள்ளும் திட்டத்தை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. கேரளாவில், கொரோனா அச்சுறுத்தலுக்‍கு இடையே பணி செய்யும் போலீசாருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய, 2 குழுக்‍கள் அமைக்‍கப்பட்டன. இந்த குழுக்‍குள், மாநில அரசிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி, போலீசார், ஒரு வாரம் பணி செய்து, ஒரு வாரம்…

மேலும்...