முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!
சென்னை (06 பிப் 2023): முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்காக விமர்சனங்களைச் சந்தித்த பாஜக முன்னாள் நிர்வாகி லட்சுமணச்சந்திரா விக்டோரியா கவுரி, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான பாஜக மகிளா மோர்ச்சா தலைவராக இருந்த விக்டோரியா கவுரி. கிறிஸ்தவத்திற்கு எதிரான கட்டுரை எழுதியதற்காக விமர்சிக்கப்பட்டார். மேலும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இவரை நீதிபதியாக பரிந்துரைத்துள்ள நிலையில் கொலிஜியம் பரிந்துரைக்கு…