முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!
சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…