ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம், நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுவதற்கு, எந்த அனுமதியும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ரமலானில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ரமலான் 1 முதல் 19 வரையிலான நாட்களில், அதிகாலை 2.30 முதல் சுப்ஹு தொழுகை வரையிலும், முற்பகல் 11.30 முதல்…

மேலும்...

மதீனாவில் மின்சார வாகன போக்குவரத்து சேவை தொடங்கியது!

மதீனா (09 ஜன 2023): மதீனாவில் 100 மின்சார வாகனங்களுடன் போக்குவரத்து சேவை தொடங்கியது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் 500 மின்சார வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என மதீனா முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் மற்றும் யாத்ரீகர்களின் போக்குவரத்து சேவைகளை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது. முதல் கட்டமாக மஸ்ஜித் நபவி, குபா மஸ்ஜித் மற்றும் சையிது ஷுஹாதா சதுக்கம் இடையே மின்சார வாகன சேவைகள் நடைபெறும். மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசலுக்குச் செல்வதற்கும் வருவதற்கு…

மேலும்...

மனம் மாறி புனித மக்காவில் பிரபல தமிழ் நடிகை – கண்ணீருடன் பிரார்த்தனை – VIDEO

மக்கா (22 டிச 2022): பிரபல தமிழ் நடிகை மும்தாஜ் மனம் மாறி புனித மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ளார். திரைப்படங்களில் கோலோச்சிய நடிகை மும்தாஜ். டி.ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிஷா என்ற படம் மூலம் அறிமுகமானார். இவர், விஜய் நடித்த குஷி, சத்யராஜூடன் மலபார் போலீஸ், லூட்டி பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன், மிட்டா மிராசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். அர்ஜூனுடன் வேதம், ஏழுமலை, தவிர் தமிழக முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில்…

மேலும்...

மதீனாவிற்கு 8 கோடிக்கும் அதிகமான யாதரீகர்கள் வருகை!

மதீனா (16 டிச 2022): மதீனாவில் உள்ள ஹரம் மசூதியில் 5 மாதங்களில் 8 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் தொழுகை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஹரம் விவகாரத் துறைத் தலைவர் ஷேக் அப்துர்ரஹ்மான் சுதைஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹிஜ்ரா ஆண்டின் தொடக்கமான முஹர்ரம் முதல் கடந்த 12 நாட்கள் வரை தொழுகையை நிறைவேற்றிய பெண்கள் உட்பட யாத்திரிகர்களின் எண்ணிக்கை இதுவாகும். இந்த காலகட்டத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் ரவுதா…

மேலும்...

ஆன்லைனில் உம்ரா விசா – வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு!

ஜித்தா (21 செப் 2022): வெளிநாடுகளில் இருந்து மக்கா செல்லும் உம்ரா யாத்ரீகர்கள், மக்காம் தளம் மூலம் உம்ரா விசா பெற முடியும் என, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளி நாடுகளில் இருந்து உம்ராவிற்கு வருபவர்கள் உம்ரா பயணத்தை முன்பதிவு செய்து தங்கள் சொந்த நாடுகளில் இருந்து உம்ரா விசாவை https://maqam.gds.haj.gov.sa/ மின்னணு தளம் மூலம் பெறலாம். https://maqam.gds.haj.gov.sa/ போர்ட்டலில் உள்நுழைந்து தேவையான சேவைகளை முன்பதிவு செய்து விசாவிற்கு விண்ணப்பித்த பிறகு வழங்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி…

மேலும்...

மக்கா – மதீனா ஹரமைன் ரெயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜித்தா (13 டிச 2021): மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையேயான ஹரமைன் அதிவேக இரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹரமைன் அதிவேக இரயில் சேவையில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், தினமும் கூடுதலாக 16 சேவைகள் இயக்கப்படும் என்று இரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரமைன் இரயில் சேவை மக்கா, ஜித்தா, ராபிக் மற்றும் மதீனா ஆகியவற்றிற்கு உண்டு. இதற்கிடையே ஜித்தாவின் சுலைமானியா நிலையத்திலிருந்து மக்காவிற்கு மேலும் எட்டு தினசரி சேவைகளும், மதீனாவிற்கு…

மேலும்...

வெளிநாட்டு ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு இலகுவான முறையில் சவூதி அரேபியா புதிய நடைமுறை அமல்!

ஜித்தா (14 நவ 2021): வெளிநாட்டிலிருந்து வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவிற்கு தாங்களாகவே செல்லும் வசதியை சவூதி அரேபியா ஏற்படுத்தியுள்ளது. ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே ஹஜ் உம்ரா யாத்ரீர்கர்கள் மக்காவிற்கும், மதீனாவிற்கும் செல்லும் வசதி இருந்து வந்தது. இது தற்போது தளர்த்தப்பட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இரண்டு விண்ணப்பங்கள் மூலம் இதை எளிதாக்கியுள்ளது. ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்கு சென்றதும், தவக்கல்னா மற்றும் எதமர்னா ஆப் மூலம் இரண்டு பெரிய…

மேலும்...

மக்கா மற்றும் மதீனாவில் லட்சக் கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பு!

ரியாத் (23 அக் 2021): மக்கா மற்றும் மதீனா பெரிய மசூதிகளில் தொழுகை மற்றும் பிரார்த்தனைக்கு முழு நுழைவை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். மக்கா மதீனாவில் பிரார்த்தனைகளில் இப்போது சமூக இடைவெளி தேவையில்லை என அறிவிக்கப் பட்டது. அதேவெளை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விரிவான வசதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை, மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில், டாக்டர். மாஹிர் அல்-முய்கிலி ஜும்ஆவை வழிநடத்தினார். ஜும்ஆவுக்கு…

மேலும்...

புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – மக்கா செல்ல உள்நாட்டு யாத்ரீகர்களுக்கும் தற்காலிக தடை!

ஜித்தா (04 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில் முஸ்லிம்களின் புனித இடமான மக்காவிற்கு உள்நாட்டு யாத்ரீகர்கள் செல்லவும் தற்காலிக தடை விதிக்கப்படுள்ளது. கோவிட் – 19 (COVID-19) எனப்படும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகமெங்கும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக சுகாதார மையம் செய்வதறியாது தவிக்கிறது. இந்நிலையில் முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா மதீனாவுக்கு உம்ரா யாத்திரை செல்லும்…

மேலும்...