சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின் என்பவர் ஜோர்டானிலிருந்து ஜிசான் செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். சடலம் அல் லெய்த் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் பற்றி அறிந்ததும் அவரது கணவர் ஜிசானிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று…

மேலும்...

நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்!

சென்னை (19 பிப் 2023): நடிகர் மயில்சாமி நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து மயில்சாமி நடித்துள்ளார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து சினிமாவையும் தாண்டி பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவர். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்…

மேலும்...

சவூதி அரேபியாவில் தமிழர் மரணம்!

அபஹா (14 பிப் 2023): சவூதி அரேபியா அபஹாவில் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். திருச்சிராப்பள்ளி அரியலூரைச் சேர்ந்த எட்டு வருடங்களாக சவூதியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். விடுமுறை முடிந்து நாட்டிலிருந்து திரும்பி வந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார். அபாஹா அசீர் மருத்துவமனை பிணவறையில் உள்ள சடலம் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி மேலதிக நடைமுறைகள் முடிந்தபின் வீட்டிற்கு அனுப்பப்படும் என்று ஜித்தா துணைத் தூதரக உறுப்பினர்…

மேலும்...

பட்டுக்கோட்டை வாலிபர் வெளிநாட்டில் மரணம்!

பட்டுக்கோட்டை (03 பிப் 2023): வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்காக சென்ற பட்டுக்கோட்டை வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் – கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மலேசியா விற்கு வேலைக்கு சென்றார். அங்கு கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நல க்குறைவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி…

மேலும்...

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும் அவரது மனைவி ஜார்யா, ஆறுமாத குழந்தை அர்வா, மகன்கள் அயன் மற்றும் அஃப்னான் மற்றும் ஹசிமின் மாமியார் நஜ்முன்னிசா ஆகியோர் சவூதியில் உம்ரா செய்துவிட்டு அல்கோபரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ரியாத்தில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள அல்…

மேலும்...

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் நடந்த திடீர் மரணம்!

சென்னை (18 ஜன 2023): இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் பணியில் ஈடுபட்டிருந்த லைட்மேன் 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டையில் ஏ.ஆர். பிலிம் சிட்டி (AR FilmCity) என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. இங்கே ஒரு சில படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ படத்திற்கான படப்பிடிப்புக்கு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது. இதற்காக சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார்…

மேலும்...

சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக எட்டு வயது சிறுமி மரணம்!

ஜித்தா (16 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி காய்ச்சல், வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்கேன் செய்து பார்த்ததில் இடுப்புப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த குழந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து இன்று பிற்பகல் அல் பைசலியா சமாதியில் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என ஜித்தா கேஎம்சிசி தெரிவித்துள்ளது.

மேலும்...

ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்!

இந்தூர் (07 ஜன 2023): ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஐம்பத்தைந்து வயதான பிரதீப் ரகுவன்ஷி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஜிம்மிற்கு வந்த பிரசாத், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில், பிரசாத் திடீரென சரிந்து விழுந்தது பதிவாகியுள்ளது. அவர் பிரசாத் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதாக…

மேலும்...

சீனாவில் தமிழக மருத்துவ மாணவர் அப்துல் சேக் மரணம்!

பீஜிங் (02 ஜன 2023): சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் அப்துல் சேக் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், மாணவரின் உடலைக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்துல் ஷேக், தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், டிசம்பர் 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு திரும்பினார்….

மேலும்...

பிரதமர் மோடியின் தாய் காலமானார்!

அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார் உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022) வெள்ளிக்கிழமை காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்...