யோகி ஆதித்யநாத் இல்ல காவல் படை வீரர் மர்ம மரணம்!

லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் அலிகாரி நகரின் கெய்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அரசு வாகனத்தில் தனது முகாமுக்கு அவர் திரும்பியுள்ளார்….

மேலும்...

மதரஸாக்களுக்கான வருமானம் குறித்து விசாரணை நடத்த அரசு முடிவு!

லக்னோ (22 நவ 2022): உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் வருமான ஆதாரங்களை ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக உ.பி அரசு நடத்திய சர்வேயில் பெரும்பாலான மதரஸாக்கள் ஜகாத்தை வருமானமாக அறிவித்துள்ளன. இந்த விசாரணையின்படி1500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் எங்கிருந்து இந்த ஜகாத் (நன்கொடை) பெறுகின்றன என்பது இப்போது கண்டறியப்படும். குறிப்பாக நேபாள எல்லையில் அமைந்துள்ள உ.பி., மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில், வருமான ஆதாரம் குறித்த…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுவது கடினம் – அதிர்ச்சியில் பாஜக!

லக்னோ (27 பிப் 2022): உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என பா.ஜ.க வின் உள்கட்சி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சமாஜ்வாதி – ராஷ்டிரிய லோக்தளம் கூட்டணி, லக்கிம்பூர் கெரியில் நடக்கும் வன்முறைகள், தேர்தலில் பாஜகவை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பியில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்….

மேலும்...

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார். ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கபில் கான் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக…

மேலும்...
Dr.Kafeel Khan-Gorakhpur

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார் – டாக்டர் கஃபீல் கான்!

லக்னோ (25 ஜன 2022): 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சட்டசபை தேர்தலில் என்னால் போட்டியிட முடியும். எந்த கட்சி எனக்கு டிக்கெட் கொடுத்தாலும்…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடும் சந்திர சேகர் ஆசாத்!

லக்னோ (20 ஜன 2022): பீம் ஆர்மி தலைவரும், ஆசாத் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவருமான சந்திரசேகர் ஆசாத், உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். உ.பி. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்ப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். 33 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார். உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

ஆட்டம் காணும் பாஜக – அயோத்தியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்!

லக்னோ (13 ஜன 2022): உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடே எதிர்பார்க்கும், உத்திர பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 2 பாஜக அமைச்சர்கள் உட்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் பாஜக அங்கு ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ஆட்சியைத் தக்கவைக்க தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தியில் போட்டியிடுகிறார். டெல்லியில் நடைபெற்ற பாஜகவின்…

மேலும்...

பாஜக தரப்பில் குறையுள்ளது – யோகி ஆதித்யநாத் பகீர் கருத்து!

லக்னோ (19 நவ 2021): பாஜக தரப்பில் சில குறைபாடுகள் காரணமாக வேளாண் சட்டத்தின் உண்மையான நோக்கங்களை விளக்கத் தவறிவிட்டோம். என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை அடுத்து. இந்த முடிவை வரவேற்றுள்ளஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வேளாண் சட்டத்தின் பலன்களை விவசாயிகள் நம்பவில்லை. “விவசாயிகளுடன் அனைத்து மட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளோம். ஆனால் எங்கள் தரப்பில் சில குறைபாடுகள்…

மேலும்...