ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் – கி.வீரமணி கண்டனம்!

தூத்துக்குடி (20 ஜன 2020): பெரியார் குறித்து அவதூறு தகவல் வெளியிட்டதற்காக ரஜினி தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி. ரஜினிகாந்த் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதும், ‘’ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார்…

மேலும்...

பத்த வச்சுட்டியே பரட்ட – ரஜினியைக் கிண்டல் செய்த அமைச்சர்!

சென்னை (20 ஜன 2020): “பரட்டை பற்ற வைத்தது தமிழகம் எங்கும் பற்றி எரிகிறது!” என்று நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் பேசியதற்கு “ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துக்ளக் விழாவில்…

மேலும்...

நடிகர் ரஜினி விவகாரம் குறித்து எச்.ராஜா கருத்து!

சென்னை (19 ஜன 2020): நடிகர் ரஜினி துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது, ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மேலோட்டமாக ஒரு சம்பத்தை குறிப்பிட்டதற்கே, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என்று கூறியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில்…

மேலும்...

ரஜினிக்கு முரசொலி இதழ் பொளேர் பதில்!

சென்னை (18 ஜன 2020): முரசொலி வைத்திருந்தால் திமுக காரர் என்றும் துகளக் வைத்திருந்தால் அறிவாளி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக முரசொலி பத்திரிகை பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ”முரசொலி” வைத்திருந்தால் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், “முரசொலி வைத்திருந்தால் ‘தமிழன்’ என்று பொருள். அதுவும் திராவிட இயக்கத் தமிழன் என்று பொருள். ‘முரசொலி’ வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கி…

மேலும்...

பெரியார் மீது அவதூறு பரப்பியதாக ரஜினி மீது போலீசில் புகார்!

சென்னை (18 ஜன 2020): நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது அவதூறு பரப்பியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, நாட்டுக்கு ‘சோ’ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை என்று பேசினார். அப்போது, “முரசொலி வைத்திருப்பவர்கள் திமுககாரர்கள், துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று அவர் பேசியதும், தந்தை பெரியார் பேரணி குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தந்தை பெரியார் குறித்து அவதூறு மற்றும்…

மேலும்...

சோவே பைத்தியம் என்று சொல்லிட்டார் (வீடியோ) – ரஜினியை கலாய்த்த திமுக எம்.பி!

சென்னை (16 ஜன 2020): துக்ளக் படித்தால் பைத்தியம் பிடிக்கும் என்று சோவே சொல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திமுக எம் பி செந்தில்குமார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய ரஜினிகாந்த் “முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று…

மேலும்...

தர்பார் திரைப்பட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது!

மதுரை (16 ஜன 2020): தர்பார் திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மதுரையில் நேற்று முன்தினம் தர்பார் திரைப்படம் கேபிள் டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய தகவல்கள் வெளிவந்தது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில்…

மேலும்...

ரஜினிக்கு தைரியமில்லாமல் போனது ஏனோ- சுபவீ சரமாரி கேள்வி (Video)

சென்னை (15 ஜன 2020): துக்ளக் விழாவில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலம் பற்றி பேசிய ரஜினி அதில் நடந்த உண்மை சம்பவத்தை கூற தைரியமில்லாமல் போனது ஏனோ? என்று சுபவீர பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி,…

மேலும்...

ரஜினிக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (15 ஜன 2020): ரஜினியின் துக்ளக் விழா பேச்சுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றபோது அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது ’முரசொலி வைத்திருந்தால் அவன் திமுக காரன், துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி என்று அந்த காலத்தில் பேசுவார்கள். அந்த வகையில் துக்ளக் எல்லோரும் படியுங்கள்’ என்று கூறினார். முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித்…

மேலும்...

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளியா? – ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை (15 ஜன 2020): துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. பத்திரிகையாளர், சோ.ராமசாமி தொடங்கிய துக்ளக் இதழ் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர். விழாவில், துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு இதழை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா…

மேலும்...