திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!
சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. ரஞ்சி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்ததின் பேரில், முதல்வர் முக ஸ்டாலினும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.