செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஷேக் முகமது பின் ஹமத் அல்தானி, தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட்-19…

மேலும்...

கொரோனாவின் விளைவு – இப்போது இவற்றை கழுவும் திரவமும் மார்கெட்டில் வந்துவிட்டது!

ஐதராபாத் (18 ஆக 2020): கொரோனா வந்தது மனித வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. மனிதன் குளிக்கிறானோ இல்லையோ, சானிட்டைஸர் உபயோகம் அத்தியாவசியமாகிவிட்டது. எங்கு போனாலும், கை கழுவு, சானிட்டைஸர் உபயோகம் செய் என்பதாகவே அறிவிப்புகள் இருந்தபடி உள்ளன. இந்நிலையில் காய்கறி, மற்றும் பழங்களை சாதாரண தண்ணீரில்தான் கழுவிக் கொண்டு இருந்தோம், ஆனால அதிலும் பாக்டீரியாக்கள், வைரஸ் போன்றவை 100 சதவீதம் வெளியாவதில்லையாம். அதனால் இப்போது இவற்றை சுத்தம் செய்யும், திரவமும் மார்கெட்டில் அறிமுகமாகிவிட்டது. இவற்றிற்கான…

மேலும்...

கொரோனா வைரஸ் – அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (18 ஆக 2020): கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அமித் ஷாவுக்கு மீண்டும்…

மேலும்...
Vinayagar Chathurthi

விநாயகர் சதூர்த்தியை நடத்த உத்தரவிடக் கோரி மனு – அபராதம் விதிக்கப்போவதாக நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (18 ஆக 2020): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வீதிகளில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை…

மேலும்...

டாஸ்மாக்குக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு – ஸ்டாலின் கருத்து!

சென்னை (17 ஆக 2020): தமிழகத்தில் கொரோனா பரவலில் பெறும்பங்கு டாஸ்மாக்குக்கு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும்…

மேலும்...

இறப்பு விகிதத்தைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (17 ஆக 2020): இறப்பு எண்ணிக்கையப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அனைத்து உயிரிழப்புகளுக்கும் கொரோனா காரணம் இல்லை. கொரோனா நோயாளிகளில் 10 சதவீதம் பேர்…

மேலும்...

கொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: யோகலட்சுமி VIDEO

இன்றைய நெருக்கடி நிலையென்பது நமக்கு போராத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?’ என்கிற அருமையான தலைப்பில் அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டி மன்றம் part-6

மேலும்...

தமிழக அரசு மீது எச்.ராஜா காட்டம்!

காரைக்குடி (14 ஆக 2020): விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதற்கு வாரத்தில் 6 நாட்கள் அனுமதி அளித்துள்ள அரசு, ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டுமே இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த முடிவை உடனடியாக…

மேலும்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீக்கிரமா எழுந்து வா, பாலு! #SPB pic.twitter.com/XQKmptJTlC — மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) August 14, 2020 அதில், “சீக்கிரம் வா பாலு, நீ விரைவில் வீடு திரும்புவாய் என எதிர்…

மேலும்...

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

சென்னை (14 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் திரையுலகம் கவலையில் உள்ளது.

மேலும்...