வதந்திகளை நம்பவேண்டாம் – தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!

சென்னை (18 மார்ச் 2021): தமிழகம் மட்டுமல்லாது 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “அரசியல், குடும்ப நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலை உள்ளது. அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்வோர் மாஸ்க் அணிவதில்லை. அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு…

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் 35,871 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (18 மார்ச் 2021): இந்தியாவில் ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்தது. தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொ ரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 172 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 17,741 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு…

மேலும்...
CORONA-India

தஞ்சை, பட்டுக்கோட்டை,மதுக்கூரில் பரவும் கொரோனா!

தஞ்சாவூர் (16 மார்ச் 2021): தஞ்சாவூர் அருகே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பள்ளி மாணவர்கள்…

மேலும்...
Tabligh Jamath

தப்லீக் ஜமாத்தினர் மீதான விஷமத்தனமான மருத்துவ குறிப்பு எம்பிபிஎஸ் பாட புத்தகத்திலிருந்து நீக்கம்!

புதுடெல்லி (16 மார்ச் 2021): தப்லீ ஜமாத்தை கொரோனா பரப்பியவர்கள் என அவதூறு குறிப்பை எழுதிய மருத்துவ ஆசிரியர்கள் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் அந்த குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாடப்புத்தகத்தில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து விஷமதனமான குறிப்பு பதியப்பட்டிருந்தது. இந்த குறிப்புகளை அகற்றிய ஆசிரியர்களும் புத்தக வெளியீட்டாளர்களும்,  இதுபோன்ற குறிப்புகளை வெளியிட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டனர். விஷமக்கருத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள்…

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!

சென்னை (16 மார்ச் 2021): தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த…

மேலும்...

தஞ்சையில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு – பள்ளி மூடல்!

தஞ்சாவூர் (14 மார்ச் 2021): தஞ்சசை மாவட்டம் அம்மாபேட்டை பள்ளி ஒன்றில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டதால் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது….

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை?

புதுடெல்லி (12 மார்ச் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருகிறது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

குவைத்தில் வரும் ஞாயிறு முதல் பகுதி நேர ஊரடங்கு!

குவைத் (05 மார்ச் 2021): குவைத் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு பகுதி நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக இந்த ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தவு அமல்படுத்தப்படும். வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த கூட்டத்தில் வெளிநாட்டினரை குவைத்திற்குள் அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது. அதிகபட்சமாக சென்னையில்…

மேலும்...
CORONA-India

கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வருவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை (25 பிப் 2021): கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு தளர்வுக்கு பின் மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களாக மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகிறது….

மேலும்...